Monday, August 4, 2008

ரஜினிக்கு மற்றுமொரு குதிரை - குசேலன்


ஸ்டைல் மன்னன் திருப்பியும் விழுந்து இருக்காரு , ஆனா இவரு சொன்ன படி ' இவரு யானை இல்லை, குதிரை திரும்ப எழுந்து ஓட ஆரம்பிச்சுருவரு ....

ரோபோட் - ஷங்கர் இன்னும் கொஞ்சம் அதிகமா டெக்னாலஜி'ய தாரை வார்க்க Assistant Directorsச எல்லாம் இந்நேரம் பெண்டு நிமித்திட்டு இருப்பாரு

எதுக்காக வேண்டி ரஜினி இந்த மாதிரி ஒரு படம் பண்ணனும்???


ரஜினிக்காக வேண்டியே கதை எழுத 100 பேரு ரெடியா இருக்காங்க ....சும்மா நாலு பாட்டு, கொஞ்சம் காமெடி ,நிறைய ஸ்டைல்'னு விட்டாலே 100 நாள் தாராளமா ஓடும் படம் .

அப்புறம் எதுக்கு ஒரு நல்ல கிளாசிக்கான மலையாள கதைய எடுத்து ,அதுக்கு மசாலா எல்லாம் தடவி 'ஒரு மொக்க' படத்த எடுத்து மக்கள நோவடிக்கணும்.

சிவாஜி'ல எல்லாம் என்ன எளவு இருந்துச்சு??? கதையும் கிடையாது, ஒரு புடலங்காயும் கிடையாது.... "சும்மா ஊருக்கே நல்லது செய்ற ஹீரோ, வில்லன் ஏமாத்துராறு , அப்புறம் ஹீரோ திரும்ப வந்து வில்லன வெளுத்துகட்டுறாரு "
இது அரத காலத்து பழைய கதை. இதுக்கே கொஞ்சம் கிராபிக்ஸ் , டெக்னாலஜி அது இதுன்னு போட்டு திரைக்கதையா நல்ல ஸ்டைல் சீன்ஸ் 4 வச்சு ஹிட் படம் ஆக்குனாங்க.

ஆனா ஒன்னு கமல் கொஞ்சமும் கவலை பட தேவை இல்லை...திரும்ப தமிழ்ல ஒரு நல்ல படம் வர இன்னும் 3 மாசமாவது ஆகும் ..அது வரைக்கும் தசாவதாரம் வசூலுக்கு குறைச்சல் இல்லை.


ரஜினி'ங்குற குதிரை அடுத்த ரேஸ்'ல (சுல்த்தான் , ரோபோட் ) நல்ல ஓடும்னு எதிர்பார்ப்போம்


நன்றி - http://cinematoons.blogspot.com

4 comments:

இரா. வசந்த குமார். said...

அன்பு அனீஸ்...

வருக... வருக... தமிழ் வலையுலகத்திற்கு...!

ஏண்டா ... வந்தவுடனே ரஜினியைத் தாக்கி ஒரு பதிவு போட்டாகணுமா..?

என்ன பண்றது... பத்திரிக்கை காரங்கள்ல இருந்து, சேனல் பீபிள் வரைக்கும் காசு பண்றதுக்கும், காலை வார்றதுக்கும் ரஜினி தேவைப்படறாரே...

உனக்கு மட்டும் வேண்டாமா..?

எஞ்சாய் மேடி....!

Hareesh said...

hahaha.... நான் அந்தத் திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஆணால் மக்களிடம் உள்ளா பொதுவான கறூத்து இது தான். அந்த படத்தைப் பார்பதற்கான இனையதளம் தெரிந்தால் சொல்லு....

Wandering Dervish said...

வசந்த குமார் அவர்களே,
நல்ல கவனிங்க நான் ரஜினி'ய மட்டம் தட்டலை அவரோட படத்த தான் மட்டம் தட்டி இருக்கேன். அவரோட அடுத்த படம் நல்லா ஓடனும்னா, ரஜினி ரஜினிக்கு ஏத்த மாதிரி கதைகள்ல நடிக்கணும். அதே தான் சொல்லி இருக்கேன்

ரஜினி , கமல் ரெண்டுபெரும் பந்தய குதிரைகள் மாதிரி , ஒன்னு ஓடாம, இன்னொன்னு மட்டும் ஓடினா அந்த பந்தயத்துல சுவாரசியமே இருக்காது

Anonymous said...

//அந்த படத்தைப் பார்பதற்கான இனையதளம் தெரிந்தால் சொல்லு//

www.tamilthunder.com

 

| இங்கிலீஷ்'ல |