Saturday, February 21, 2009

தமிழ் கூட்டம் - கடைசி வாய்ப்பு.


தமிழ் இனத்திற்காக இது வரைஏழு இளைஞர்கள் தீக்குளித்து உள்ளார்கள்...அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். நாமஎல்லாரும் நல்லா சோறுதின்னுட்டு , கேடு கெட்டடிவியும் ,சினிமாவும்பார்த்துட்டு இவன்நொட்டிட்டான், அவன்கிழிச்சிட்டானு புடுங்கித்தனமாபேசிட்டு இருக்கிற, அதேவேளைல சிந்தனை வசப்பட்டு, தீர யோசித்து நிதானமாகா அறிக்கை எழிதிட்டுதன்னை தானே எரிச்சிட்டு இருக்காங்க.

ஒரு பக்கம் நமது கண் முன்னாடியே தமிழ் இனத்தின் இதயம் மெல்ல, மெல்லஅரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க இதுக்கு கூட்டு வேற நம்மதாய் திருநாடு உள்பட. இன்னொரு பக்கம் அத பத்தி எதுவுமே கவலைப்படாமவேற ஒரு தமிழ் கூட்டம் சினிமா, அரசியல், ஜாதி, வேலை,குடும்பம் மயிருன்னுஇருக்கு. இன்னொரு கூட்டம் பெரிய அறிவாளிங்க மாதிரி இது தப்பு, அது சரின்னுஆராய்ச்சி பண்ணிட்டு அறிக்கை விட்டுட்டு இருக்கு. அதுல இருக்கிற நிறைய முட்டாள்களுக்கு தெரியாது இந்த போராட்டம் அவர்களுக்காவும் அவர்களின் நாளைய வாரிசுகளுக்காகவும் சேர்த்து தான்னு .

விடுதலை
புலிகள் நிறைய தவறுகள் செய்து
உள்ளனர்.இனிமேலும்செய்வார்களான்னு தெரியாது. ஆனா விடுதலை புலிகளை அழிய விட்டால், தமிழ்இனத்தின் தனி அடையாலாமா ஒரு ராணுவமோ, அதிகார அமைப்போ , கல்விமுறையோ , வாழ்க்கை கூறுகளோ எதிர் காலத்தில் ஏற்படாது.

கலாச்சார பலம் இல்லாத எந்த வித முன்னேற்றமும் சமூக ஒழுங்கைஏற்படுத்தாது.
நமது பலம் தமிழ் கலாச்சாரம். அதை சிறிது சிறிதாக இழந்து கொண்டுஇருக்கிறோம்.
இந்த தனி நாடு போராட்டத்தின் வெற்றி கட்டாயம் நமது பலத்திற்கு இன்னும்
வலு சேர்க்கும்.


ஏற்கனவே இளிச்சவாயன்னு தண்ணி தர மாட்டேனுங்குறாங்க , எங்கபோனாலும் தர்ம அடி விழுகுது ...தைரியமா எதிர்த்து கேட்க நாதி இல்லை . என்னகாரணம்னா, தன்மானமுள்ள உரிமைக்கு எதிராக எந்த சமாதானமும் செய்துகொள்ளாத தலைமையும் போராட்ட குணமும் கொண்ட கூட்டமோ நம்மிடத்தில்இல்லை.

ஈ.வே.ராமசாமி, ஹிந்தி எதிர்ப்பு காலத்துக்கு அப்பொறம் ரொம்ப நாள் கழிச்சுஇன்னைக்கு இப்போது தமிழ் இன அழிப்பிற்கு எதிராக எழுந்துள்ள ஒரு சிறியதீப்பொறியை சரியா ஊதி பெரிதாக்கா விட்டால் எல்லாருக்கும் எள்ளுன்னுஆய்டுவான் தமிழன்.

பின்னாடி பொலம்பி ஒரு பிரயஜோனமும் இல்லை.


தீக்குளித்த சகோதரர்களுக்கும் களத்தில் மற்றவரின் எந்த வித உதவியும் இன்றிதனித்து போராடும் புலி வீரர்களுக்கும், கலச்சமரர்களுக்கும் வீர வணக்கங்கள்.

Kawzulu condems (எங்கோ இருக்கிற ஒரு நாடு கண்டனம் தெரிவிக்கிறது. இருவது மைல் தொலைவில் இருக்கும் இந்தியா தன்னுடைய கடமையை மறந்து நிற்கிறது ).


புலிகள் அழிவது கடினம் அல்லது அது நடக்காது என்பதற்கு ஒரு சாட்சி

Saturday, January 17, 2009

சிவாஜி கணேசன் - இலங்கை வானொலி பேட்டி.

சிவாஜியின் அருமையான சிறிய தமிழ் உரை.
இன்று சிவாஜியின் நடிப்பு பற்றி பலருக்கும் பல விதமான கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞன் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை எல்லாம் விட மிக அன்பான பண்பு மிக்கவர். அவர் அரசியலிலும் அதை எதிர்பார்த்ததே அவருடைய அரசியல் வாழ்வு குழப்பத்துடன் முடிவுற்றதற்கு காரணம்.

அவர் இலங்கை வானொலியை சார்ந்த அப்துல் ஹமீதிற்கு அளித்த ஒரு சிறிய வானொலி பேட்டி. பேட்டியை கேட்க படத்தை க்ளிக் செய்யவும்.

நன்றி
இலங்கை வானொலி
தமிழ்வாணன். காம்

Monday, January 12, 2009

குழந்தைகளின் சாபங்கள்.

மரணங்கள் அடர்ந்த இந்த வாழ்க்கையில் நம்முடைய மகிழ்ச்சி என்பது நிலையான ஒன்று என்பதில் இருந்து எப்பொழுதோ தனிமை பட்டு விட்டது. வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் கொண்ட நிகழ்வுகளில் இருந்து மட்டுமே தொலைந்து போன உவகையையும், பரவசங்களையும் சில மணிநேரங்கள் மட்டுமே பெற்று கொண்டு, மறுபடியும் உணர்ச்சிகள் மழுங்கிய இந்த உலகத்துக்குள் திரும்ப நுழைகிறோம்.

இப்படிப்பட்ட சாபக் கேடாக மாறி கொண்டே இருக்கும் உலகத்துக்கு என்று ஒரு சில வரங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. இயற்கை அளித்த அவ்வெல்லா வரங்களிலும் மிகச்சிறந்த வரம் எதுவென்றால் நம்மோடு கொஞ்சிக் குலாவி மகிழும் மகிழ்த்தும் குழந்தைகள்.

குழந்தைகள் நமக்கு என்றுமே ஒரு சுவாரசியம் குறையாத கூட்டாளிகள்.நம்முடைய நெருங்கிய காதலி(கள்) அல்லது நண்பர்களிடம் கூட நமக்கு மௌனமான , சோர்வான தருணங்கள் ஏற்பட்டுவிடும். ஒரு நிலைபாடு அற்ற இது தான் செய்ய வேண்டும் அல்லது இதை தான் செய்யும் ,செய்ய போகிறது என்ற வரையறைக்குள் சிக்காமல் இருக்கும் இயல்பே குழந்தைகளை சுவாரசியம் குன்றாதவர்களாக ஆக்கின்றது.

நாம் குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லி தர முயல்கிறோம்.ஆனால் நமது குழந்தைகள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்துகின்றன. குழந்தைகளும், செல்வமுமே வாழ்க்கையின் அலங்காரங்கள் என்கிறது திருக்குர்ஆன்.

அப்படிப்பட்ட குழந்தைகளின் குழந்தைப்பிராயமே அவர்களுக்கு தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அளவில்லாத கொடுப்பினை. அந்த பேரின்பத்தை இன்று சிறிது சிறிதாக உலகமயமாக்கல் மற்றும் அதன் முன்பின் காரணியான நவீனமயமாக்கல் இரண்டும் போட்டி போட்டு திருடி கொண்டு இருக்கின்றன.

குழந்தைகளுக்கு சிறந்த கல்வி முறை எதுவென்றால் அவர்களை அவர்களின் போக்கில் விளையாட விடுவது.ஆனால் இன்றோ விளையாட்டு என்பது kinder garden னில் இருக்கும் playrooms'சுக்குள்ளும் , பள்ளிக்கூட மணி ஒலிக்கும் விளையாட்டு மைதானங்களுக்குள்ளும் அடங்கி விட்டது. அதை தாண்டி வெளியில் விளையாடும் குழந்தைகளை பார்ப்பது ஒரு அபூர்வமான தரிசனம் என்றாகிவிட்டது.

கில்லி, கோலி, கபடி , சீட்டுக்கட்டு செதுக்குறது , ஒளிஞ்சி புடிச்சு , பாண்டி, எறிபந்து , கல்லாமண்ணா, நொண்டி, பம்பரம் வரை எத்தனையோ விளையாட்டுக்களை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினம் தினம் நம்முடைய குழந்தைகள் விளையாடி தினம் தோறும் நமது தெருக்களை அலங்கரித்து வந்தது. இன்று எல்லாம் அடங்கி வீட்டுக்கு வந்தவுடன 1 மணி நேரம் ஹோம் வொர்க் , 1 மணி நேரம் டியூஷன் , அப்பொறம் 1 மணி நேரம் கார்ட்டூன், அப்புறம் ஒரு மணி நேரம் play ஸ்டேஷன் அல்லது video Games என்றாகிவிட்டது.

கோலி விளையாட்டினில் மட்டும் மொத்தம் 13 வகையாவிளையாடி இருக்கிறேன். சத்தியமாக எந்த கேம் guide 'அல்லது கேம் tutor' ரோ அருகில் இருந்து சொல்லி தரவில்லை. சில ஏற்கனவே இருந்தன. சில நமது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாமாக உருவாக்கியவன.


குழந்தைகளின் சிருஷ்டிகரத்தன்மை நாம் வாங்கித்தரும் puzzle பாக்ஸ்'சிலோ அல்லது transformer டாய்ஸ்'சிலோ இல்லை.அவர்களுக்கு உண்டான உலகத்தை, அவர்களுக்கு உண்டான விளையாட்டுகளை அவர்களுக்கு பிடித்தமான முறையில் அவர்களின் நண்பர்களோடு அவர்களே மிகச்சிறப்பாக சிருஷ்ட்டித்து கொள்வார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அப்படி பட்ட உலகம் உருவாக தடையாக இல்லாமல் இருபதே. அவர்களின் நண்பர்களாக வீடியோ கேம்ஸ்சையும் , கார்ட்டூன்களையும் நாமே தீர்மானித்து அவர்களிடம் திணிக்காமல், தராமல் இருபதே.

இன்று எல்லாக்குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருப்பது வயதுக்கு மீறிய அறிவும் , அதை போற்றி கொண்டாடும் பெற்றோர்களுமே. வயதுக்கு மீறிய அறிவு ஒரு வரம் அல்ல. சாபம். கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அந்த தன்மையை வயதின் மூப்பால் இயல்பாக இழக்க வேண்டுமே தவிர, அதையும் அறிவின் பெருமைக்காக அல்ல. இப்படி பட்ட அறிவை வலுக்கட்டாயமாக குழந்தைகளிடம் புகுத்தும் பெற்றோர்கள் சாபக்கேடுகள். அதற்கான சிறப்பான வழிமுறைகள் கணினியும், வீடியோ கேம்ஸ், கார்டூன்ஸ் மற்றும் இவை அனைத்தையுமே தனக்கான உலகம் என்று குழந்தைகளை எண்ண வைக்கும் நேரமற்ற பெற்றோர்கள்.


இன்று குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக வரும் வீடியோ கேம்ஸ் அறிவோடு சேர்ந்து வயதிற்கு மீறிய வன்முறைக்கான குணாதியசங்களை அழகாக சொல்லித்தருகின்றன. நூறு கேடு கெட்ட ஹீரோயிச மசாலா படங்களைப் பார்த்து நாம் பெற்ற சீரழிவை நான்கு அல்லது ஐந்து வீடியோ கேம்கள் செய்து விடுகின்றன.

உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டுமே உருவாக்கம் பெற்று வளரும் இந்த வயதில் , உடல் சார்ந்த விளையாட்டுகளே குழந்தைக்கு இவ்விரண்டையும் அளிக்கின்றன. ஆனால் இன்றோ பள்ளி முடிந்து அபார்ட்மென்ட் சிறைக்குள் புகும் குழந்தை மறுநாள் அதிகாலை தான் அரக்கப்பறக்க அடுத்த நாள் உலகத்தை சில நிமிடங்கள் விழுங்க முடிகின்றது பள்ளி சிறைக்குள் செல்லும் வரை.

தெருக்கள் எல்லாம் இருள் சூழ்ந்து வெறிச்சோடி கிடக்கின்றன டியுஷன்களும் , வீடியோ கேம்களும் கபளீகரம் செய்த குழந்தைகள் இன்றி.இப்படி உருவாக்கம் பெறுகின்ற குழந்தைகளிடம் குழுமனப்பான்மையோ, பொதுவிற்க்காக சிந்தித்தலோ, அன்பு சார்ந்த குணங்களோ மட்டுப்பட்டு போய் வெற்றி சார்ந்த வெறியே மிஞ்சி நிற்கும். அல்லது தோல்வி என்பதை தாங்கிக்கொள்ளும் எந்த மனோபலமும் மிஞ்சாது.

இன்று உலகத்திலேயே மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறது இந்தியா. இது வரை இந்த தற்கொலை வியாதி மூன்றாம் வகுப்பு குழந்தைகள் வரை முன்னேறி உள்ளது. என்ன கொடுமை பாருங்க..?? இன்னும் கொஞ்ச நாள்ல LKG பெயில்'ன்னு தற்கொலை செஞ்சிட்டங்கன்னு செய்தி வராம இருந்தா சரி.

ஆங்கிலேய அடிமை குமாஸ்தா கல்வி முறை சாபக்கேட்டில் இருந்தே மீள இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் எடுக்கும் போலத்தெரிகிறது. இதில் நின்று கொள்ளும் விஷமாக பரவும் இந்த தாய் எட்டடி பாய்ந்தால் குட்டியை நாற்பது அடி பாய வைக்கும் நவீன வியாதிக்கல்விமுறை வேறு. மொத்தமாக ஒரு நூற்றாண்டிற்காண குழந்தைகளை கண் முன்னே பலி கொடுத்து கொண்டு இருக்கிறோம் , புன்னகைத்தவழ.

அவர்களின் சாபங்கள் என்றுமே நமது கல்லறைகளில் , அழிந்து தொலைந்து போன சிரிப்பு சத்தங்கங்களிலான மலைப்பிரசங்கங்களாக ஒலித்து கொண்டிருக்கும்.

ஒரு முறை ஒரு ஜென் துறவியிடம் சென்று தன்னுடைய நான்கு வயசு பிள்ளையின் அட்டகாசம் தாங்க முடியலை, அவன பேசமா உங்க மடத்துல சேர்த்து பெரிய மகானா ஆக்கிருங்கன்னு சொன்னாரு ஒருத்தரு. அதுக்கு அந்த துறவி சரி அதுக்கு முன்னாடி உனக்கும் உன் புள்ளைக்கும் ஒரு சின்ன போட்டி, யாரு தோற்கிறாங்களோ அவுங்க மடத்துல சேர்ந்துட வேண்டியது தான்'ன்னு சொல்லிட்டாரு. நாலு வயசு புள்ளை தான ,அவன ஜெயிக்க முடியாத நம்மால, பய புள்ளைய எப்படியாவது மடத்துல சேர்த்துடனும்னு சரின்னு சொல்லிட்டான் நம்ம ஆளு.

துறவி வந்து அந்த ஆளுகிட்டேயும் அவனோட குழந்தைகிட்டேயும் ஒரு ஆயிரம் மரப்பொம்மையையும், பத்து வர்ண பொட்டியையும் கொடுத்து ஆளுக்கு பாதியா இது எல்லாத்துக்கும் வித விதமான வண்ணம் அடிங்க. யாரு சந்தோசமா, சீக்கிரமா செய்யிறீங்களோ அவுங்க வீட்டுக்கு போலாம் தோத்தவுங்க மடத்துல சேர்ந்துடுங்க 'ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

குழந்தை ரொம்ப நேரம் அந்த பொம்மைகளோட விளையாடுச்சி.அப்பொறம் வண்ணங்களோட விளையாடுச்சி.அப்பொறம் கைல வண்ணத்த அள்ளி சரசரன்னு அதுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் பொம்மைகள் மேல பூச ஆரம்பிச்சுருச்சி. மணிநேரத்துல வேலைய முடிச்சிட்டு துறவிகிட்ட போய் இன்னும் கொஞ்சம் பொம்மை வேணும்னு கேட்க ஆரம்பிச்சுருச்சி .

நம்ம ஆளு அங்க உள்ள உட்கார்ந்து என்ன இப்படி ஆகிப் போச்சு நம்ம நிலைமை'ன்னு பொலம்பிகிட்டே வண்ணத்த தூரிகைன்னால எடுத்து எடுத்து பூசிட்டு இருந்தான்.

சாமி வந்து அவன்ட்ட ரெண்டு காவித்துணிய கொடுத்து நீ போய் மடத்து வேலைகள கவனிக்க ஆரம்பின்னாரு .

அவர்களின் போக்கில் அவர்களை விட்டு குழந்தைகளிடம் தான் நாம் புதிய சிந்தனைகளை கற்க முடியும், என்பதற்கு சொல்லப்படும் ஜென் கதை இது .

Friday, January 2, 2009

சூபியிசமும் முல்லாவும்.


சூபியிசம் என்றல் என்ன ? அப்படின்னு ஒரு சூபியிடம் கேட்டாராம், ஒரு சீடர். அதற்க்கு அந்த சூபி சொன்ன பதில் "காஞ்ச சாணி ".

உலகத்தையும் ,அதன் நடைமுறைகளையும் இடது காலால் எட்டி உதைத்தவாறு உண்மை பற்றிய அறிதலை ,அதற்க்குண்டான தேடல் உடையவர்களுக்கு மிக மிக நிதானமாக, மண்டை காஞ்சு போற அளவுக்கு இல்லாமல் ஒரு வித கேலியுடனும் நகைச்சுவையுடனும் புரிய வைப்பது தான் சூபி ஞானிகளின் குறிக்கோளாக இருக்கிறது. 

குழந்தைகளின் கேளிக்கை மனோபாவத்துடனேயே சூபிக்களின் வாழ்நாள் முழுதும் கழிகிறது.அவர்களுக்கு ஒரு நாளும் சோம்பல் கிடையாது, வாழ்க்கை சலிப்படைவதும் கிடையாது.ஒவ்வொவொரு நாளும் புது புது விளையாட்டுக்கள்.முட்டாள்களை போன்ற கேள்விகளின்,செயல்களின் மூலம் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். 

தமிழ் நாட்டின் பல ஊர்களில், பல மஸ்த்தான் சாகிபுகளின் தர்காக்களை காணலாம். கொஞ்சம் அவர்களின் கதையை கேட்டால் அவர்களின் பல்வேறு செயல்கள், குழந்தைகளை போன்று அல்லது மன நிலை தடுமாறியவர்கள் என்று நம்மால் சொல்லப்படுபவர்களை போன்றோ இருக்கும்.மொத்தத்தில் சாதரண தன்மையில் இருந்து சற்றே நகர்ந்த செயல்பாடு உடையவர்களாவே இருக்கின்றாகள். என்றாலும் உலகை தன்னுடைய கேலித்தனமான செய்கைகளால் ஒவ்வொரு நாளும் சிந்திக்க வைத்து கொண்டே இருக்கிறார்கள் . எல்லா சூபிக்களும் ஞானிகளும் இப்படி வாழ்ந்தார்களா என்றால் இல்லை .... மிக குறைவானவர்களே இப்படி இருந்திருக்கிறார்கள். 

அவர்களுள் இன்று உலகம் முழுவதும்,நிறைய உள்ளர்த்தங்கள் பொதிந்த தன்னுடைய தற்குறித்தனமான வேடிக்கை நிகழ்வுகளால் என்றென்றும் அழியாப்புகழ் பெற்றவர் முல்லா நஸ்ருத்தீன். திருவள்ளுவரை போலவே முல்லா நஸ்ருத்தீனும் ஒருவர் அல்ல. அது ஒரு குறிப்பெயரே என்று நிறைய ஆராய்ச்சிகள் ஒரு புறம். நஸ்ருத்தீன் எங்க ஊர்காரர்தான்னு சண்டைக்கு வருகிற துருக்கி, அராபிய, பஞ்சாபிய, அல்பேனிய, ஈரானிய மக்கள் ஒரு புறம் இருக்கட்டும். 

நமக்கு தேவை கண்ணாடி குவளை அல்ல, உள்ளிருக்கும் திராட்ச்சை ரசம்.ஒரு நல்ல பட்டப்பகல் வேளையில் முல்லா நஸ்ருத்தீன் அவர் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.அப்பொழுது அங்கு வந்த ஒரு நாட்டுப்புறவாசி தன்னுடைய கையில் இருந்த ஒரு கடிதத்தை முல்லாவிடம் கொடுத்து , முல்லா இதை கொஞ்சம் படிச்சு விளக்குங்கன்னாரு. முல்லா கொஞ்சம் நேரம் அந்த கடிதத்தையே பார்த்து கொண்டிருந்து விட்டு ,அதை அப்படியே அவர்ட்ட திருப்பி கொடுத்து," அய்யா எனக்கு எழுத படிக்க வரதுன்னார்"..அதுக்கு அந்த நாட்டு புறத்து ஆளு, "என்னங்க ! பார்க்க பெரிய அறிவாளி மாதிரி தலைபாகை எல்லாம் பெருசா கட்டி இருக்கீங்க, படிக்க தெரியாதுன்னு சொல்றீங்களே!'ன்னார் . உடனே முல்லா ,வீராப்பா தலைப்பாகைய கழட்டி அந்தாளுக்கு மாட்டி விட்டு ,இந்த இப்போ நீயும் தான் தலைப்பாகை கட்டி இருக்க , உனக்கு அது படிக்க சொல்லி கொடுத்தா நீயே கடிதத்த படிச்சிகோ'ன்னுட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய்ட்டார்.

நல்ல பனி பொழியுற அர்த்தராத்திரில கும்மிருட்டுல, முல்லா வெளியூர்ல 
இருந்து வீட்டுக்கு நடந்து வந்துட்டு இருந்தாரு. அப்போ அவர பார்த்தா ஒரு தெரு நாயி வள்ளு! வள்ளுன்னு குரைக்க ஆரம்பிச்சது. உடனே முல்லா கீழா குனிஞ்சு அங்க கடந்த ஒரு கல்ல எடுக்க முயற்ச்சி பண்ணினாரு. என்ன கொடுமையோ , கல்லு ரோட்டோட ஓட்டிகிட்டு வரவே இல்லை. முல்லா உடனே, சே! என்ன உலகம்டா இது ! நாய அவுத்து விட்டுறானுங்க , கல்ல கட்டி போட்டுருறானுங்க 'ன்னு புலம்பிட்டே நடக்க ஆரம்பிச்சுட்டார்.

முல்லா அவர் வாழ்நாள் முழுவதும் மிக கடுமையான வறுமையில இருந்தார்.ஒரு நாள் அவரோட அழுக்கு சட்டை, கிழிஞ்ச மேலங்கிய போட்டுட்டு சந்தைக்கு போனாரு எதுனா வேலை கிடைக்குதான்னு தேட.அங்க பார்த்தா ஒருத்தன் பட்டு சட்டை,தங்க பொத்தான்கள் வைச்ச வெல்வெட்டு கோட், சரிகை வேலைப்பாடு செஞ்ச செருப்புன்னு போட்டு ரொம்ப ஜோரா நடந்து வந்து கடைக்காரங்ககிட்ட எல்லாம் பேரமே பேசாமா அப்படியே எல்லாம் சாமானையும் சொல்ற விலைக்கு வாங்கிட்டு இருந்தான். முல்லா ஒரு கடைக்காரர்ட்ட "யாருங்க இந்தாளு? 'ன்னு கேட்க, அவரு இவரு தான்பா "பெமி பாஷாவுடைய வேலைக்காரறு'ன்னு சொன்னாரு ". உடனே முல்லா "இறைவா! என்ன கொடுமை இது, பெமி பாஷாவோட வேலைக்காரன் எப்படி இருக்கான், உன்னுடைய வேலைக்காரன் நான் எப்படி இருக்கேன்"ன்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தார்.

நல்ல வாடை காத்து அடிக்குற ஒரு ராத்திரி முல்லா சுகமா வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்தாரு.திடீர்னு வெளிய தெருவுல கூச்சல், குழப்பம் சத்தத்த கேட்டு ஒரு கம்பளிய எடுத்து மூடிகிட்டு வெளிய வந்தார்.பார்த்தா அங்கே யாரையும் காணோம்.என்னடா இதுன்னு, கொஞ்சம் தெருவுல அந்த பக்கம் போய் பார்க்கலாம்னு நடந்தார்.அப்போ அந்த பக்கம் வந்த ஒரு பலே திருடன் டக்குனு, அந்த கம்பளி போர்வைய உருவிட்டு ஓடிட்டான். திரு திரு'ன்னு முழிச்சிட்டே "அட கர்மமே ! இவ்வளவு கூச்சலும் குழப்பமும் என் போர்வைக்கு தானான்னு " நடுங்கிட்டே வீட்டுக்குள்ள போய்ட்டாரு முல்லா.


ஒரு நாள் நதிக்கரை ஓரமா உட்கார்ந்து இருந்தார் முல்லா.அப்போ அவரோட நண்பர் ஒருத்தர் எதிர்பக்க கரைல நின்னுட்டு, முல்லா, நான் எப்படி அந்த பக்கமா வரதுன்னு ?கத்தினாரு. பதிலுக்கு முல்லா அமைதியா, நீ அந்த பக்கமா தான் இருக்கேன்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார்.

நிறைய திராட்சை பழக்குலைகளை கையில கொண்டு வந்துட்டு இருந்தாரு முல்லா.அப்போ அங்க வந்த குழந்தைகள் கிட்ட ஒரு குலைல இருந்த பழங்கள மட்டும் பிச்சுபிச்சு கொடுத்துட்டு போக போனாரு, அப்போ ஒரு குழந்தை, ஏன் முல்லா !அதான் அவ்வளவு பழம் இருக்கே, இன்னும் நிறையா எங்களுக்கு கொடுக்கலாம்ல'ன்னு கேக்க முல்லா ,"முழு குலைய தின்னாலும் சரி ஒரு பழத்த தின்னாலும் சரி, ருசி ஒன்னுதான்னு" சொல்லிட்டே கழுதை மேல ஏறி கிளம்பிட்டாரு.இப்படி நிறைய கதைகள் சொல்லிட்டே போகலாம். சாதரண மக்களிடம் மட்டும் அல்லாமல், பேரரசர்களிடமும் எந்த பயமும் அன்றி அதே பாமரத்தானமான கேள்விகள்-செயல்களின் மூலம் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியவர் முல்லா.

ஒரு முறை ஓட்டோமான் பேரரசை வென்ற மங்கோலியத்தலைவன் தைமூர் முல்லாவிடம், "நான் யார் ? என்னுடைய மதிப்பு என்னன்னு தெரியுமான்னு ?" கேட்டான்.அதுக்கு முல்லா "ஒ! தெரியுமே ! 200 வெள்ளி'ன்னாரு. பயங்கர கோபமான தைமூர் "முட்டாளே! நான் போட்டுயிருக்கும் இந்த இடுப்புவார் மட்டுமே 200 வெள்ளி இருக்கும்" சொன்னான். உடனே முல்லா , ஆமா தைமூர், அதேயும் சேர்த்து தான் சொல்றேன்னு நடைய கட்டிட்டாரு.

முல்லா இருந்த அந்த ஊரு ராஜாவுக்கு எப்படியாவது முல்லாவ மட்டம் தட்டணும்னு ஆசை .சரின்னு ஒரு நாள் முல்லாவ தன்னுடையா சபைக்கு வர சொல்லி, முல்லா !இன்னைக்கு உங்களுக்கு ஒரு பட்டம் தர போறேன், என்னன்னா இன்னைல இருந்து நீங்க தான் இந்த ஊரு கழுதைகளின் ராஜா 'ன்னு சொன்னாரு.உடனே முல்லா ரொம்ப சந்தோசங்க'ன்னு சொல்லிட்டு அங்க இருந்த ஒரு வேலைக்காரன்ட்ட ராஜாவோட இருக்கைய விட ஒரு உயரமான இருக்கையா போட சொல்லி ராஜா பக்கத்துலேயே உட்கர்ந்துட்டார். செம கோபமான ராஜா, என்ன முல்லா ,திமிரா ? என்ன தைரியம் இருந்த என் பக்கத்துலேயே உட்காருவன்னு , கத்தினாரு. முல்லா பொறுமையா ,ஹா! அமைதி ! இப்போ நான் உனக்கு ராசாவ இல்லை நீ எனக்கு ராசாவான்னு புன்சிரிப்போடு கேட்டாரு.

இப்படி வாழ்நாள் முழுக்க தன்னுடைய ஏடாகூடமான செயல்களால் மக்களை சிந்திக்க வைத்த முல்லா ஒரு முறை தான் அழுதுயிருக்கிறார்.அது கூட அவரோட கழுதை செத்ததுக்கு. என்ன முல்லா உங்க பொண்டாட்டி செத்ததுக்கு கூட அழுகலியே நீங்க ஏன் இந்த கழுத செத்ததுக்கு போய் அழுவுரீங்கன்னு கேட்டதுக்கு ..என் பொண்டாட்டி செத்தப்போ எல்லாரும் கவலைப்படாதே, இத விட நல்ல பொண்ணா பார்த்து உனக்கு அடுத்ததா கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னங்கா ஆனா என் கழுதை செத்தப்போ அப்படி யாரும் சொல்லலியே'ன்னு அழுதாராம்.

முல்லா அல்பேனிய, துருக்கிய மக்களால் ஹோஜா (கண்ணியம் மிக்க ஆசிரியர் ) என்று அன்போடு நினைவு கூறப்படுகிறார்.இன்று எத்தனையோ வேறு முல்லாக்கள் வேறு பல காரணங்களால் அறியப்பட்டாலும் எனக்கும் முல்லா என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஹோஜா அவர்கள் மட்டுமே.

இவருடைய பிறப்பு, வாழ்க்கை, இறப்பு எல்லாமே ஒரு நாடோடியை போன்றே உள்ளது சரியான விவரங்கள் இல்லை. அவருடைய கல்லறை இருப்பதாக சொல்லப்படும் கொன்யாவில் அவருடைய கல்லறை மிக பெரிய கதவுகளால் மூடப்பட்டு இருக்கிறது 
..கதவுகளில் பொறிக்கப்பட்ட வாசகம் 

" சில நேரம் மிகப்பெரிய கதவுகளை கடந்து செல்ல திறவுகோள்கள் தேவைப்படுவதில்லை. தேவைப்படுவது எல்லாம் கதவுகளை சுற்றி ஒரு சிறு நடை தான். ஏன் என்றால் இந்த கதவுகள் எந்த சுவர்களையும் மூடுவது கிடையாது. "


ஆம் உண்மையிலேயே சுவர்கள் அற்ற கதவுகள் தான் சூபிஞானம்


மேலும் முல்லா கதைகள்
 

| இங்கிலீஷ்'ல |