Sunday, November 2, 2008

தமிழ் சினிமா - இட்லி, கறிக்குழம்பு .



சினிமா கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் உலகத்துல பொறந்த எல்லா தமிழனையும் போல நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்து தமிழ் சினிமா தான் நம்ம வாழ்க்கையோட பரிணாம வளர்ச்சிக்கு (???) உறுதுணையா இருந்துருக்கு.

நான் பார்த்த படம் மட்டும் ஆயிரக்கணக்கில இருக்கும்.அல்லது நூத்துக்கணக்கில !!!!
ஒரு காலத்துல எந்த படத்த அன்னைக்கு பார்கிறேனோ, அந்த படத்தோட ஹீரோவா அன்னைக்கு ராத்திரி அதே ஹிரோயினியோட, அதே ஷூட்டிங் லொகேஷன்ல கனவுல கும்மி அடிக்குது வழக்கமா இருந்து இருக்கு.

இன்னைக்கு நினைச்சு பார்த்தா எனக்கு நானே கோமாளி பட்டம் கட்டிக்கலாம்.


1.
) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு எல்லாம் கரக்கிட்டா தெரியலை ... எங்க வூட்ல எல்லாரும் ரஜினிகாந்த், விஜயகாந்த் பைத்தியங்க. அதுலேயும் எங்க அம்மாவுக்கு ரஜினிகாந்த் படம்' ன்னா உயிர். மொதமொதல்ல மதுரை சென்ட்ரல் தியேட்டர்ல மாப்பிள்ளை படத்துக்கு, தூக்குவாளில இட்லி கறிக்கொழம்பு எல்லாம் கட்டிக்கிட்டு , எங்க பக்கத்து வூட்டு அக்கா, அவுங்க பொண்ணு , எங்க மாமா பையன் எல்லாரெயும் கூட்டிகிட்டு,பெஞ்சு டிக்கெட் வாங்கி அம்மா கூட ரசிச்சு படம் பார்த்தது, எப்போடா இண்டெர்வல் வரும் கறிக்கொழம்போட இட்லி' சாப்பிடுவோம்னு தவிச்சது , சும்மா இருடா அனத்தாமன்னு சொல்லி, எங்க அம்மா முக்கா வாசி இட்லியையும் கறிக்கொழம்பையும் , பக்கத்து வீட்டு பொண்ணுக்கே ஊட்டி விட்டது. நானும் எங்க மாமா பையனும் வெறுப்பாகி அழுது ஆர்பாட்டம் பண்ணி கோன் ஐஸ்கிரீம் வாங்கித்தின்னது (அந்த பொண்ணுக்கு கொடுக்காம ) ,அப்புறம் அடுத்த நாள் ரஜினி மாதிரியே என்னை நினைச்சிக்கிட்டு, கிளாஸ்' இருக்கிற எல்லாருக்கும் கத்திக்கப்பல் செஞ்சதுக்காக, கனகா மிஸ் என்னை சாரி கேக்க சொல்ல , கேக்க மாட்டேன்னு சொல்லி (அவுங்க ஸ்ரீவித்யா நாம ரஜினி 'ன்னு நினைப்பு ) ஓவரா ஹீரோயிசம் விட்டு செம மாத்து வாங்கினது, எல்லாம் எனக்கு மறக்குதோ இல்லையோ , எங்க அம்மாவுக்கும் கனகா மிஸ்ஸுக்கும் மறக்காது .

என்ன உணர்ந்தேனா ?? ஒரு மண்ணும் உணரல ... ..அம்மாகிட்ட அடுத்த படத்துக்கு போறதுக்கு முன்னாடியே கறிக்கொழம்பும் , சோறும் ஒரு தடவ வீட்லியே வாங்கி சாப்பிடனும்'ன்னு தான் அப்போதைக்கு உணர்ந்தேன்.


2)
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
விருமாண்டி....3 தடவ தியேட்டர் ' .. தீவிர ரஜினி ரசிகர்கள் நிறைந்த குடும்பத்துல பொறந்த நானும், எங்க அண்ணனும் வெறித்தனமான கமல் ரசிகர்களா ஏன் மாறினோம் ?எப்படி மாறினோம்'ன்னு ரூம் போட்டு தான் யோசிக்கணும்


3)
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம். இந்தியா போனவுடன இந்த படத்த நம்ம ஊர்ல (மதுரைங்க எங்க ஊரு ) தியேட்டர்'லே பார்க்கணும்னு நினைச்சு, அதே மாதிரி ஊருக்கு போயி டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணி வச்சு ...அதான் டிக்கெட் இருக்கே, லைட் 'சரக்கடிச்சிட்டு போகலாம்னு தண்ணிய போட்டு வண்டிய ஒட்டி குப்புற விழுந்து படத்துக்கு போகாம ஆஸ்பத்திரிக்கி போனப்போ, இனிமே எந்த படத்துக்கும் ரிசர்வ் பண்ணி டிக்கெட் எடுக்க கூடாதுன்னு உணர்ந்தேன்.


4)
மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

அன்பே சிவம். கமல் கடைசி காட்சியில மழை' நடந்து போகும் பொழுது அந்த நாயும் ஓடி வருமே, அப்போ ரொம்ப நேரம் அழுதுட்டு, உடனே அடுத்த ஷோ'க்கு கவுண்ட்டர்'லே டிக்கெட் வாங்கி வந்து, கடைசி பத்து நிமிஷம் முழுக்க அழுதுட்டே படம் பார்த்தது...

ஏன்ங்க அந்த படம் ஓடலை ?

5.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நம்ம ஊரு சினிமா'வும் அரசியலும் ஒன்றோட ஒண்ணு கலந்தது ..
எல்லா படத்துலேயும் அரசியல் இருக்கும்,
அரசியல்ல
எல்லாம் நிறையவே நடிப்பு இருக்கு. இதுல எதை சொல்ல ???

தேவர் மகன் படம் வந்த நேரத்துல எங்க ஊர் முழுக்கு நிறைய கலவரம் அடிதடின்னு ,
அப்போ
ஒன்னும் புரியலை..இப்போவும் புரியலை.

)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ராஜ பார்வை' அந்தி மழை பாட்டுல, கோட்டு ஓவியமா, அப்புறம் ஓவியமா இருந்து , அப்படியே காட்சியா விரியும் ,மரங்களுக்கு இடையில கமல் நிக்கிறது ...இன்னைக்கு வரைக்கும் வேற எந்த படத்துலேயும் அதுக்கு சமமா எந்த காட்சியும் தொழில் நுட்ப ரீதியா மனசுல பதியலை... கவிதையும், கற்ப்பனையும், தொழில் நுட்பமும் ஒரே புள்ளில இணைஞ்ச ஒரு காட்சி அது

6.
தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வேற என்னங்க வேலை. என்னதான் பிரெஞ்சு , இத்தாலியன் படங்கள் எல்ல்லாம் பார்த்தாலும் மூளைக்கு கொஞ்சம் கொஞ்சம் கிளுகிளுப்பு ஊட்ட, நம்ம ஊரு கிசுகிசு, கசமுசா, எல்லாம்
கரெக்ட்
' ட்டா படிச்சிருவோம்.

7.
தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா இசை' பத்தி ஒரு ரசிகனா என்னோடு கருத்து என்னனா .........
ஒன்னும் இல்லைங்கா

ரொம்ப சோகம் இல்லாத, கேட்டா கொஞ்சமாவது உற்சாகம் கொடுக்குற எல்லா பாட்டையும் கேப்பேன்..
திருவாசகமும் பிடிக்கும், டாக்ஸி டாக்ஸியும் பிடிக்கும்

உலக இசை பத்தி சொல்ல நிறையா இருக்கு.
ஒரு
நைட் கிளப், ராக் ஷோ விடாம போயி பார்த்து சரக்கு அடிக்குறோம்ல.

8)
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஒரு
காலத்துல எங்க அப்பாகூட சேர்ந்து மௌன்ட் ரோடு' (மலையாள படமா போடுவாங்களே என்ன தியேட்டர்'ன்க அது, பேரு மறந்து போச்சு ) மம்மூட்டி, மோகன்லால் நடிச்ச நிறைய படம் பார்த்துருக்கேன் ...உபயம் அப்பாவின் மலையாள நண்பர்கள் ..
ஆனா ஒரு படமும் மனசுல நிக்கலை..ஏன்னா முக்கா வாசி படங்கள், நான் நேர்ல பார்த்த வாழ்க்கைய வேற கலாச்சாரப் பின்னணியோட திரைல பார்க்கிற மாதிரி இருக்கும்.

நம்ம தமிழ் படம் மாதிரி ,ஹீரோ பதினாறு பெற சட்டைல அழுக்கு படாம அடிச்சி தூள் கிளப்பிட்டு, ஹீரோயின்னோட அண்டார்டிகா' ஜகஜமா ஒரு சட்டை மட்டும் போட்டுட்டு, அந்தம்மா அது கூட இல்லாம பாடிட்டு இருந்தா மனசுல நின்னுருக்கும்.

ஹிந்தி படங்கள் நிறைய பார்த்தேன், பார்கிறேன். என்ன சுத்தமா யோசிக்கவே வேண்டியது இல்லை ஜாலியா படம் பார்த்துட்டு தியேட்டர்'க்கு வெளில வந்தா எல்லாம் மறந்து போயிடும்.

இப்போ சீன, கொரிய மொழி படங்கள் அதிகம். இந்த படங்களா எல்லாம் பார்க்கும் பொழுது தோணுறது ஒன்னே ஒன்னு தான், நம்மக்கிட்ட இத விட சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகள், தளங்கள், களங்கள் கொட்டி கிடக்கு...
என்ன ரூம் போட்டு யோசிக்காம ஊற சுத்தி பார்த்தா போதும்

பிரெஞ்சு , இத்தாலியன் , ரஷ்ய படங்கள் என்னமோ இப்போ பார்க்கிறது இல்லை ..ரொம்ப யோசிச்சு படம் எடுத்து நம்மலேயும் குழப்பி , அவனுங்களும் குழம்பி கடுப்பேத்திறானுங்க.பாதி இத்தாலியன்,பிரெஞ்சு , ரஷ்ய பட டைரக்டர் கள் ஏன் தற்கொலை பண்ணிக்கிறானுங்க'ன்னு இப்போ புரியுது.


9)
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சிறிய தொடர்பு உண்டு. ஒரு படத்தயாரிப்பாளரோட மூணாவது நண்பரோட, நாலாவது நண்பர் என்ற முறைல.
சினிமா எடுக்க வேண்டிய learning by observing நிறைய இருக்கு ...
கூடிய சீக்கிரம் கொஞ்சம் மரை களண்டு , பார்க்கிற நல்ல வேலைய விட்டுட்டு இந்தியா' எதுனா ஒரு டைரக்டர்' கிட்ட .டி யா அழுக்கு ஜீன்ஸ் போட்டுகிட்டு , சோறு தண்ணி இல்லாம குப்பை கொட்டப் போறேன்னு , நிறைய பேரு WARNING message அனுப்பிட்டு இருக்காங்க.


10.
தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னங்க காமெடி பண்றீங்க ??? எம்.ஜி.யார், சிவாஜி இல்லைனா ஒரு காலத்துல தமிழ் சினிமா'வே இல்லைன்னு இருந்தது.
ஆனா அவுங்க அவ்வுலகம் சென்ற பின்னாடி,
இவ்வுலகத்துல தமிழ் சினிமா இல்லாமையா போயிருச்சு

எதிர்காலம் புதிர்காலம்'ன்னு காமெடி பண்ணாதீங்கப்பா

11.
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நமக்கு பிரச்சனை இல்லை ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு'ன்னு வேற மொழி படம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். தமிழர்கள் நிலை என்னன்னு சொல்றது.???
இப்போவே நிறைய பேரு தியேட்டர்'க்கு போயி தமிழ் படம் பார்க்கிறது இல்லை.
எல்லாம் டி.வி.டி தான்...

வழக்கமா இங்கிலீஷ், ஹிந்தி படமா ஓட்டுற மல்டிப்ளெக்ஸ்' எல்லாம் எங்கள மாதிரி வாலிப வயசு பசங்க கூட்டம் வழக்கம் போல் நிரம்பி வழியத்தான் போகுது .

ஆனா நம்ம ஊரு அரசியல் வாதிங்க எல்லாம் பக்கவாத நோய் வந்த மாதிரி நொந்து போயிருவாங்க.

நம்ம முதல்வருக்கு நிறைய நேரம் மிஞ்சும். என்ன பண்ணுவாரு ?? குடும்ப சண்டைய தீர்த்து வைப்பாரா ? இல்லை கரண்ட் கட் ஆகம இருக்க திட்டம் போடுவாரா ? இல்லை M.p வாபஸ் , வாபஸ் இல்லை'ன்னு கேம் விளையாடுவாரா ?

கேப்டன் னுக்கும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே அவர் படம் நடிக்கிறதும், அதை மத்தவங்க பார்க்கிறதும் கம்மி தான்.

இந்த மாதிரி தமிழ் வளர்ச்சிய கெடுக்கிற மாதிரி கேள்வி கேட்டதுக்கு மருத்துவர் அய்யா , திரு.மா கிட்ட எல்லாம் உங்கள ஏன் போட்டு விட கூடாது ???


அப்பாடி ஒரு வழியா எல்லா கேள்விக்கும் பதில் எழுதியாச்சு !!!
அடுத்த தடவ கேள்வி கேட்டா "choose the best answer"மாதிரி சொகுசா கேளுங்கப்பா

யார்ட்ட அடுத்து இத ரவுண்டு விடலாம்னு பார்த்தா, நான் ரசிச்சு படிக்கிற வலை உலக பெரியவங்க எல்லாம் ஏற்கனவே இதை பத்தி எழுதிட்டாங்க.

நீங்க பதில் சொல்லுங்கன்னு சின்னப் பசங்கள்ட்டா கேள்வி கேக்குற அளவு, நான் பெரிய ஆள் இல்லை.

அதுனாலா எல்லா MLM 'ம்க்கும் கடைசில நடக்கிற கதைப்படி இதை இத்தோடா முடிச்சுக்குறேன்...

ஆட்டைய்யை
கலைசாச்சி டோய் , டும்! டும்! டும் .

1 comment:

Anonymous said...

A friend told me this place I have been looking for, I come, it turned out, I have not disappointed, good Blog

 

| இங்கிலீஷ்'ல |