
ஆயிரத்தெட்டு வழி இருக்கு இன்னைக்கு எழுத. செரி நாமளும்
எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. அதுக்காக ஒரு வலைப்பூவும் துவங்கியாச்சு.
ஆனா பல நேரம் என்ன எழுதுறதுன்னோ ,அல்லது எதுக்கு எழுதனும்னோ தோணுது
வாழ்க்கைல சுவாரசியம் இல்லாம இல்லை, அல்லது அனுபவத்துக்கும் பஞ்சம் இல்லை. ஆனா அதெல்லாம் ஏன் உன் எழுத்துல கொண்டு வரலைனா சொல்ல தெரியலை.
நிறைய பேரோட எழுத்துக்கள, புத்தகங்கள படிச்சி இருக்கேன்.
சும்மா ஒரு நூல் பிடிச்சபிலையோ அல்லது பல கலர் நூல கலந்து புடிச்சாப்பலையோ , நிறையவோ, கொஞ்சமாவோ எழுதிட்டு போயிறாங்க. படிக்கவும் நல்லா இருக்கு.
சிலர் வீடு மாத்தினது, புது வீடு எப்படி இருக்குதுன்னு எழுதுறாங்க.
சிலர் டாஸ்மாக்'ல கூட்டாளிகளோட தண்ணி அடிச்சத கொஞ்சம் பழைய காதல் தோல்வியோட கலந்து கவிதையா அழகா கதையா எழுதுறாங்க.
சிலர் புதுசா வந்த இளவயது காதலி பத்தியும், ஊடல் கூடல்கள பத்தியும் அற்புதமா எழுதுறாங்க.
சிலர் தான் கண்ட அல்லது சொல்லக்கேட்ட காமத்தை பத்தி தெளிவா எழுதுறாங்க.
சிலர் தான் பார்த்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள, காயங்கள கொடுரங்கள எழுதுறாங்க
சிலர் சும்மா ஊற சுத்தி பார்த்து அத எழுதுறாங்க
சிலர் திரைப்பட விமர்சனமா எழுதுறாங்க
சிலர் எல்லாத்தை பத்தியும் அழகா குறிப்புகள் மாதிரி எழுதுறாங்க
சிலர் குளிக்கிறத பத்தி கூட எழுதுறாங்க
சிலருக்கு தொழில்நுட்பம், சிலருக்கு இசை , சிலருக்கு இச்சை , சிலருக்கு மொழி தத்துவம், சிலருக்கு கவிதை , சிலருக்கு மொக்கை , சிலருக்கு மதம் , சிலருக்கு மதவெறி , சிலருக்கு சமையல், சிலருக்கு சிந்தனை , சிலருக்கு பிரச்சாரம் ,சிலருக்கு பல விஷயங்கள் , இப்படி எத்தனையோ பல விஷயங்கள் எழுத இருக்கின்றன சிலருக்கு
எல்லாமே நிச்சயமாக எனக்கு ஏற்படுறமாதிரி விஷயங்கள் தான்
ஒரு சிலத படிக்கும் பொழுது, அட நம்ம சொல்ற மாதரியே இருக்கேன்னு தோணுது
ஆனா இதை அதை எல்லாம் ஏன் நான் எழுதலை ?
இந்த கேள்விக்கு எனக்கு நானே பல நேரம் சொல்லி, எழுத தோன்றிய எல்லாவற்றையும் எழுதாமல் விட்ட காரண பதில் ஒன்னே ஒன்னு தான்.
எதை நான் புதிது ,அறிவானது, அழகானதுன்னு எழுதினாலும் அது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அரதப்பழசான, சொல்லி சொல்லி அலுத்து போன கதையாகத்தான் இருக்கும்.
அதை வேற எதுக்கு திருப்பி சொல்லணும்?
அப்படிப் பார்த்தா இங்க வாழ்ற பல மனுஷங்க ஏற்கனவே எவனோ ஒருத்தன் வாழ்ந்த்துட்டு போன வாழ்க்கைய தானே வாழ்ந்துட்டு இருக்காங்க
ரொம்ப புதுசா தான் மட்டுமே அனுபவிக்கிறதா, அழுகுறதா, சிரிக்குறதா நினைச்சு.
அப்ப ஏன் அதே வாழ்க்கைய ரொம்ப தனித்துவம் வாஞ்சதுன்னு சொல்லி திரும்ப திரும்ப வாழனும் ?
பதில் யார்கிட்ட இருக்கு வார்த்தைகள் இல்லாமல் நிதமும் நம்ம வாழ்க்கையோட கலந்து உறைஞ்சி போன இந்த கேள்விக்கு ???
P.S:
இருந்தா கொஞ்சம் எழுதுங்களேன்.
9 comments:
me the first? word verification எடுத்திடுங்க
என்னை மாதிரி சிலர், வாழ்வில் ஞானத்தை பெறுவது எப்படின்னு எழுதறோமே பாக்கலையா?
நன்றி ராப் .word verification
எடுத்துட்டேன்
நமக்கு இந்த ஞானம் எல்லாம் கொஞ்சம் ஓவரான டாபிக் :)
உங்களுடைய தமிழ் சினிமா பதிவு அருமை.
அனேகம் பேர் வெளி நாடுகளில் இருந்து பொழுது போக்குறது இதில தான். யாரிடமாவது மனசவிட்டு ஆத்திறத்துக்கு நல்ல வழி இதுதான்.
/*சிலர் சும்மா ஊற சுத்தி பார்த்து அத எழுதுறாங்க
*/
என்னை மாதிரி சும்மா ஊர் சுத்திட்டு அதை எழுதற மாதிரி எழுதலாமே நீ?
பரவால்ல... என் ப்ளாக்ல ஊர் சுத்தறதை எழுதி இருக்கறதை மட்டும் பாத்திருக்க..!
வாழ்த்துகள்.
ஆட்காட்டி,
மனசு விட்டு ஆத்திகறது ரொம்ப கம்மியான பேரு தான். மிச்சவங்க எல்லாம் split second popularity'க்காக எழுதுறவங்க .
காலப்பயணி
இங்கு கதைகள்,கிசுகிசு,கசமுசா , மொக்கை, அறிவியல், வணிகம், அறவுரை,கவிதை எழுதி கொட்றாங்க. பயணக்கட்டுரை மாதிரி விஷயங்கள் எல்லாம் நல்ல நடைல எழுதுறது உன்னை மாதிரி ஒரு சிலரில் ஒரு சிலர்(a few in a few).
அதுனால தான் அந்த அடையாளம் கொடுத்தேன் ...
உன் வலைப்பூவின் பெயரும் ஒரு காரணம் :)
டேய் நாடோடி...
உன்ன சினிமா பதிவுக்கு கோர்த்து விட்டிருக்கேன். கொஞ்சம் இத பாருங்க சார்::
http://kaalapayani.blogspot.com/2008/10/blog-post_9555.html
மறக்காம எழுதிடு....!!! ;-)
It seems my language skills need to be strengthened, because I totally can not read your information, but I think this is a good BLOG
See you in these things, I think, I started feeling good!
Personalized Signature:贵州信息港休闲游戏中心,我爱掼蛋网,重庆游戏中心,金游世界视频棋牌游戏中心,南通棋牌游戏中心,贵港热线休闲游戏中心,淮安棋牌游戏中心
Post a Comment