Thursday, November 6, 2008

சூன்யக்காரனும் படுகொலைகளும்


உலகின் ஏதாவது ஒரு மூலையில் படுகொலைகளும், அக்கிரமங்களும் நடக்கும் பொழுதெல்லாம் மனம் உளவியல் ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும், ஆன்ம தேடலுடனும் கடவுள் சார்ந்த கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விடுகின்றது.

முதலில் எதற்காக அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட வேண்டும் ? கடவுளே உலகத்தின் நடப்புகளை தீர்மானிக்கின்றார் என்றால் .... ,
உயிர் கொடுப்பதும் எடுப்பதும் அவன் இஷ்டம் செயல் என்றால்.... ,
நாம் அனைவரும் அவன் கையினில் அகப்பட்ட பொம்மையா ?
இந்த குரூர விளையாட்டு எதற்காக ?.

பிரதிநிதித்துவத்தின் வாயிலாக தன்னை அறிதலுக்காவே ,கடவுள் இந்த விளையாட்டை விளையாடுகின்றார் என்றால், மனித இனத்தை படைத்தது முதல் எத்தனை, எத்தனை கோடானுகோடி உயிர்கள் கடவுளின் இந்த அறிதலுக்காக அழிந்து போய் இருக்கின்றன ?

கடவுள் நம்ம உருவாக்கியது நம்மை நாம் அறிந்து ,கடவுளையும் அறிந்து ஞானம் பெற்று அதன் வாயிலாக ஞானம் பெறாத மக்களை வழிப்படுத்த என்றால் ,எத்தனை லட்சம் ஞானிகள் எத்தனை கோடி மக்களை வழிப்படுத்தி விட்டார்கள்.ஆனால் அடுத்து என்ன நடந்தது ? அதற்க்கு அடுத்து தோன்றிய ஞானம் கெட்ட மனிதனுக்கு இந்த மறைந்து போன ஞானிகளால் என்ன பிரயோஜனம்?
மறுபடியும் ஞானம் தேடுதல், மறுபடியும் ஞானம் கொடுத்தல்... கொடுத்தல், தேடல், கொடுத்தல் ,அழிதல், தேடல் ,........தீராத விளையாட்டு இது...


சரி, இது மாதிரி அல்ல கடவுள். அவன் வினை, எதிர் வினை தத்துவங்களுக்கு அப்பர்ப்பட்டவன் என்றால் இந்த மாதிரி ஒரு வினைகளற்ற , பிடிப்பில்லா கடவுளினால் என்ன பிரயோஜனம் நமக்கு ?

மொத்தத்தில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் தான் சுயநலத்தின் பிறப்பிடம் . தன்னுடைய சுயத்தை அறிய நாம் எல்லாம் அவனுக்கு பகடை காய்கள் .

இப்படி எல்லாம் விளையாடி கடைசியில் அவனுக்கு என்ன மிஞ்சுகிறது ??
இப்படி எல்லாம் பூமியில் மனித இனம் தோன்றியது முதல் ஞானம் பெற்ற கோடி ஞானிகள் அவனுக்கு போத வில்லையா ?? இன்னும் எதை அவன் மனம் தேடுகிறது ?
மனம் அற்ற நிலை உடையவன் அவனானால் , எதை கொண்டு அவன் தேடுதல் முழுமை அடையும் ?

முழுமை அடைந்த்தவன் அவன் என்றால் ஏன் இந்த தீராத விளையாட்டு ??

மேலே தோன்றியனா எல்லாம் சமூக அக்கிரமங்கள் , மற்றும் கொடூரங்களை முன் நின்று எதிர்க்க கையாலாகாத்தனத்திற்கு ,சால்ஜாப்பு சொல்ல வந்த கடவுள் பற்றிய தேடலின் கேள்விகள் என்று வைத்து கொள்ளலாம்.

கீழே வருபவை, அதன் தொடர்ச்சியாக கடவுள் சார்ந்த இன்ன பிற மூட தத்துவங்கள் மீது எழும் கேள்விகள்

மாந்த்ரீகம் : இது உண்மை என்றால் ஏன் ஒரு நாட்டின் தலைவனோ , தலைவியோ அவனை எதிர்க்கும் இன்னொருவனுக்கு ஏவல், சூன்யம் செய்தோ அல்லது
வசியப்படுத்தியோ பெரிய போரையும் ,ரெண்டு பக்கமும் நிகழும் வீண் உயிர் , பொருள் இழப்பையும் தடுக்க கூடாது

இது மட்டும் உண்மை'ன்னா ராஜபக்ஷே'க்கு சூன்யம் வச்சு அலேக்கா தமிழ் ஈழத்த வாங்கிடலாமே ...

ஏன் இந்த மாதிரி மந்திர தந்திர வேலைகள் மிகப்பெரிய விஷயங்களுக்கு பயன் படுவதில்லை. நம்ம பக்கத்து வீட்டுகாரகள் , தெரிந்த, தெரியாத அப்பாவி ஜனங்களோடு மட்டுமே தன்னுடைய சக்தியின் எல்லையை நிறுத்தி கொள்கின்றன ?

பேய்,ஆவி : புஷ் உட்பட அமெரிக்க ஜானதிபதிகள் ஒரு வருடத்திற்கு போடும் கொலை ஆணைகள் மட்டும் பல ஆயிரங்களை தாண்டும். எங்கே போகின்றன இத்தனை பேருடைய ஆவிகள்..ஏன் இவை பேயாக மாறி புஷ்ஷையும் , ராஜபக்ஷேய்வையும் , ஆப்பிரிக்க கொடுங்கோல் தலைவர்களையும், சர்வாதிகாரிகளையும் புடித்துக் கொள்வதில்லை ?
இவுங்கள்ட்ட என்ன பயமா ஆவிகளுக்கு ? அப்போ நம்ம மட்டும் இளிச்சவாயனுங்க ஆவிகளுக்கு கூட !!!!!!


வாஸ்த்து, ஜோதிடம், எண் கணிப்பு ஏனையப்பிற : இவை அனைத்துமே ஒரு மிகப்பெரிய வெளியில் விளையாடும் probability விளையாட்டு. நிறைய permutations and combinations. தொண்ணூறு சதவிகிதம் தப்பாகவே நிகழும். மீதி பத்து சரியாக நிகழ்வதும் இந்த தொண்ணூறு சதவிகிதத்தின் எச்சமே. இதை எல்லாம் சரிக்கட்ட இன்னு நிறைய generalizations. எல்லாருக்கும் ஏற்ற ஒன்றை எல்லாருக்குமே சொல்வது . உதாரணம் கிழக்கு பக்க வாசல், 9 நம்பர் ரொம்ப சக்தி வாய்ந்ததுங்க .


செல்வம் கொழிக்கும், அள்ளி தெளிப்பாய் என்று ஆருடம் கேட்ட எத்தனையோ போராளிகள்,அப்பாவி மக்கள் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் ஆருடம் சொன்ன ஆசாமிகளோடு .

எத்தனையோ மாந்த்ரீக, தந்திரங்களை தங்கள் வாழ்க்கையோடு பல ஆயிரம் ஆண்டுகளாக பின்னி பிணைந்து கொண்டு, அதனால் நொந்து நசிந்து வாழ்ந்த சீனர்கள், ரஷ்யர்கள், ஐரோப்பியர்கள் எல்லாம் , இன்று இவற்றை கடவுளோடு சேர்த்து பின்னுக்கு தள்ளிவிட்டு உடல்,பொருள் சார்ந்த கோட்பாடுகள் அடங்கிய வாழ்க்கை முறையோடு மிக சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பாவ,புன்னியத்திலான வாழ்க்கையை உதறி விட்டு சரி,தவறுகள் அடங்கிய வாழ்க்கை முறையே மனம் ,உடல் இரண்டிற்கும் நல்லது என்ற தத்துவமே மிக சிறந்தது.

இப்படியான வாழ்க்கை முறை கடவுள் சார்ந்து இல்லாமல் இருப்பதோடு , அதனை சார்ந்து எழும் நிறைய வாழ்வியல் குழப்பங்களையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

ஆனால் This Dilutes the life more and reduces the spiciness and beauty of life.

சுருக்கமாக சொல்லப்போனால் கடவுள் என்ற தூணுக்கு நாம் தேவை இல்லை.
நமக்கு தான் சாய்வதற்கும்,நெடு நேரம் சும்மா நிற்பதற்கும் அது தேவை ...

6 comments:

Anonymous said...

இப்போ கலியுகம். அரக்கரின் ஆட்சிக்காலம்.
துன்பங்களும் துயரங்களும் தான் தலைவிரித்தாடும்.
மனம் துன்பத்திலும் துயரத்திலும் துவண்டு விடும்.
ஆதலால் இப்படி தெய்வ நிந்தனைகளிலேயே மனம் ஈடுபடும்.

நல்லதே நடக்கும்.
நல்லதே நடக்கும்.
நல்லதே நடக்கும்.


எங்கும் அன்பும் அமைதியும் நிலைத்திட அருள் செய்திடுவாய் ஆண்டவனே,
எங்கும் நின் கருணை நிறைந்திட கருணை செய்வாய் பேரருளே.

Wandering Dervish said...

தலைவா!!! நல்ல காரணமாகீது இது !!!
அப்போ மத்த யுகத்துல எல்லாம் சண்டை கொடுமை எல்லாம் நடக்கலியா?

இல்லை அப்போ நடந்தது எல்லாத்துக்கும் கடவுள்கிட்ட சரியான காரணம் இருக்க ஏன்னா?

Che Kaliraj said...

யாருப்பா அது கடவுள் இல்லை என்று சொன்னது?

கீழ இருக்கிற பட்டியல பாருப்பா

ஒன்று. சுனாமியால் பல மக்களை அழித்து வைகுண்டதுக்கும், கைலாயதுக்கும் இடம் மாற்றி இடப்பிரச்சனையை தீர்த்தார்.

இரண்டு. சாதி,மதம் ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட செயலையே செய்து வருகிறார்.

மற்றும் பிற ........................

Wandering Dervish said...

காளிராஜ்,
இதையே தான பல ஆயிரம் வருஷமா கடவுள் செஞ்சிட்டே இருகாரு?
அவருக்கு சலிப்பு தட்டலை ? அப்பொறம் அந்த வைகுண்டம் கைலாயம் மட்டும் தான ஏழாவது சொர்க்கம் எட்டாவது நரகம் எல்லாம் இல்லையா?

Che Kaliraj said...

கடவுளின் உச்ச கட்ட காமெடி கடவுளின் பெயரால் நடப்பதால் எதிர்த்து பேச ஆளு இருக்க முடியாது. மதம் பிடித்து அலையும் மனிதன் தான் கடவுளை காக்க சக மனிதனை கடவுளிடம் அனுப்புகிறான் ரத்தம் இல்லாமல், உயிர் இல்லாமல். வாழ வழியாத மக்களை படைத்தது என்னைகும்பிடு என்றால் என்ன அர்த்தம்? வா வந்து இந்த பூமியில் வரிகட்டி வேஷம் போடாமல் ஒரு பெண்ணை மட்டும் காதலித்து, காதல் அறுத்து தாடிவைத்து, வசவு பல வாங்கி வாழ்க்கை பாதையில் பொய் பேசாமல் , உன்னை மட்டும் காத்துக்கொள்ள தெம்புடன் உயிருடன் ஒரு பேரன் காலம் வரை வாழ் . ஊழ்வினை என இனி மக்களை ஏமாற்ற இயலாது.

வாழ வழியும் இல்லை, குடிக்க கூழும் இல்லை . வந்தனம் செய்ய சொல்கிறாய். கலிகாலமாம் இப்படித்தான் இருக்குமாம் . கடவுளே யுத்த மரபை மீறும் போது பல கன்னியருடன் இருக்கும் போது, பொறுக்கிகள் இருக்க மாட்டார்களா? யார் செய்தாலும் குற்றமே . இந்த கேவலத்துடன் கடவுளுக்கும் பங்கு உண்டியலில்

Anonymous said...

It seems my language skills need to be strengthened, because I totally can not read your information, but I think this is a good BLOG

 

| இங்கிலீஷ்'ல |