வந்து ஆறு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு படத்துக்கு கூட போகலை. இது தமிழனா பொறந்த நமக்கு எவ்ளோ பெரிய அவமானம்'னே?
டேய் வந்து 8 மாசம் ஆச்சுடா! அப்படியே படத்துக்கு போறதுன்னா என்ன படத்துக்கு போறது ? எல்லா தியேட்டர்'லயும் சைனீஸ் ,கொரியன் படம் தான் ஓடும் . இல்லேன்னா ஹாலிவுட் படத்தையும் டப்பிங் பண்ணி சைனீஸ்'ல காட்டுவானுங்க, ஒரு மண்ணும் புரியாது.
நமக்கு இன்னைக்கு நைட்டுக்கு எப்படியும் ஒரு படத்துக்கு போயி ஆகணும்.. அண்ணே கலைக்கு ஏது மொழி, சாம்பாருக்கு எதுக்கு புளி? அது ! இதுன்னு, மொக்கைய போட்டு கடைசியா அண்ணன ஒத்துக்க வச்சாச்சு
நேரா மல்டிப்ளெக்ஸ் கவுன்ட்டருக்கு போனோம்..ரெண்டு சீனக்காரிங்க, வாங்கோ ! வாங்கோ வணக்கம்'ன்னு , அன்ப பொழிய ஆரம்பிச்சாளுங்க.
மொதல எங்க ரெண்டு பேருக்கும் சீன மொழி பேச வராது ,சீனாக்கரங்களுக்கு இங்கிலீஷ் கிலோ என்ன விலை தான் ?...எப்படி எந்த படம் எந்த ஷோ'ன்னு சொல்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்போ அப்பாடின்னு கவுன்ட்டற சுத்தி படங்களோட போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க ! hulk போஸ்டர் உட்பட.
ரொம்ப புண்ணியமா போச்சுடா சாமின்னு, கவுன்ட்டர் அம்மணிகிட்ட கைய காமிச்சு , அவள திரும்ப சொல்லி அண்ணன் ஓடி போயி hulk போஸ்டர்ர தொட்டுட்டு அங்க இருந்து ௨'ன்னு கத்தினாரு ... திரும்பி வேகமா கவுண்டர்கிட்ட ஓடி வந்து, டிக்கெட்ட கேட்டா அவ வேற ஒரு படத்தோட டிக்கெட்டு ரெண்ட கொடுத்தா. அண்ணன் கடுப்பாகி, திரும்பவும் ஓடி பொய் தொட்டு காமிக்க, திரும்பவும் வேற படம் இப்படியே 3 தடவ நடந்துருச்சு..
இம்புட்டேயும் நான் கவுண்டேர்'ல நின்னு ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்..
என்ன பிரச்சனைனா அண்ணன் தொட்ட hulk போஸ்டர் வலது பக்க ஓரமா இருந்தது. அந்த கவுன்காரி பார்க்கும் பொழுத்து hulk படத்தோட பக்கத்து போஸ்டர் வரைக்கும் தான் தெரியும், கூடவே அண்ணன் தெரிவாரு, ஆனா hulk போஸ்டர்ரோ அதை காட்டுற அண்ணன் கையோ தெரியாது ... கவுண்டர் ஸ்க்ரீன் மறைச்சிகிரும்.
நான் வந்து ,
அண்ணே என்ன ஒளிஞ்சி பிடிச்சி விளையாடுறீங்களா அம்மணியோட?'ன்னு கேட்க , அண்ணன், டேய் ! நானே கடுப்புல இருக்கேன், படமே வேண்டாம், வா சரக்கு அடிக்க போலாம்'ன்னு டென்ஷன் ஆகிட்டாரு.
நான் அப்புறம் அண்ணே இது தான் பிரச்சினைன்னு உண்மைய சொல்லி அந்த அம்மணிய கையோடு இழுத்துக்கிட்டு போயி hulk 'க காமிச்சோம்..
ஒரு வழியா அம்மணி புரிஞ்சிக்கிட்டு 2 டிக்கெட்டு நைட் 10.30 மணி ஷோவ்வுக்கு தந்துச்சு. ஒரு மணி நேரம் சும்மா அந்தா மால்ல சுத்திட்டு திரும்ப 10.20 'க்கு போனா உள்ள விட மாட்டேனுன்டாங்க ...உங்க பங்க்ச்சுவாலிட்டி'ல இடி விழன்னு 10 நிமிஷம் கழிச்சு உள்ளை போயி உட்கார்ந்த்தோம் .
பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை தியேட்டர்'ல அப்படியே நம்ம ஊரு INOX தான் சவுண்ட் எபக்ட்ஸ் , ஸ்க்ரீன் எல்லாமே ... பாத்ரூம் கூட அழகா அதே ஒன்னுக்கு அடிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க ஒரு ஸ்க்ரீன் மூஞ்சிக்கு நேரா..
படம் பரவா இல்லை ... மொழி எல்லாம் தேவை படல புரிஞ்சிக்க ...லைட்டப்போட்டு தியேட்டர்ர விட்டு எழுந்துறிக்கும் பொழுது எண்ணி பார்த்த மொத்தமா 20 பேரு தான் இருக்கானுங்க
கர்மம் 20 பேருக்கு ஒரு ஷோவாடா?. இதே எங்க ஊரா இருந்தா இந்நேரம் வெள்ளி கிழமை நைட் ஷோவுக்கு சத்யம் தியேட்டர் புல்லாகி கும்மி அடிச்சி இருக்கோம்!!!
எப்படியும் அடிச்ச சரக்குக்கு கொஞ்ச நேரம் ac'ல உட்கார்ந்தாச்சு .
அப்படியே மப்ப மெயின்டைன் பண்ணி வீட்டுக்கு வண்டிய விட்டாச்சு
2 comments:
//இது தமிழனா பொறந்த நமக்கு எவ்ளோ பெரிய அவமானம்'னே?//
அது சரி...:) கிகிகிகி
It seems a little more than I need to check the information, because I was thinking: Why does not my GLOG these things!
Post a Comment