ரத்தத்துளிகள், மீண்டும், மீண்டும் கழுத்து நாளங்களை உடைத்துக்கொண்டு முகத்தில் தெறித்து விழுகின்றன . காதலோடு , ஆவலுடன் மூழ்கிய பொழுது உடலை காமத்தினால் சுட்டெரித்த அபர்ணாவின் ரத்தம் , இன்று ராமன் முகத்தில் தீராத கரையாய் வன்முறையின் அடையாளங்களோடு..
ஹே ராமில் வரும் இந்த காட்சி கலவரங்களில் பலியான சொல்லப் படாத , முகம் தெரியாத நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சாட்சி.
இந்த காட்சியைப் பார்க்கப் படத்தை கிளிக்கவும்
சாகேத் ராம் ஒரு சாதாரண நடுத்தர வாசி . மனதை நிறைக்க அழகான அன்பான காதலியாக அமைந்த மனைவி , வயித்தையும் மூளையையும் நிறைக்க நல்ல ஒரு வேலை என்று நிம்மதியாக வாழும் சாகேத் ராமின், நிகழ்கால வாழ்விற்கும், வருங்கால வாழ்விற்கும் என்றுமே தீராத சாபமாய் வந்து அமைகிறது அந்த நாள்.
முஹம்மது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினைக்காக மக்களை (குறிப்பாக முஸ்லீம்'களை) நேரடி நடவடிக்கைக்காக தெருவில் இறங்கச் சொன்ன நாள் (Direct action day ). சீக்கிரமாகவும் சுமுகமாகவும் நடக்க வேண்டிய பிரிவினையை, காந்தியும் காங்கிரசும் முட்டாள் தனமாக நேரம் தாழ்த்தி விபரீதத்தை வளர்த்து கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ் அரசும் ஒரு நிரந்தர நஷ்டத்தை பாரதத்திற்கு வெகு சாமர்த்தியமாக, நிதானமாக ஏற்படுத்தி கொண்டு இருந்த காலக்கட்டம்.
நேற்று வரை அன்பான உபசரிப்புகளுடனும் , வாய் சண்டைகளுடனும் இருந்த சமூகங்களுக்கு இடையில் பிரிவினை திரி கொளுத்தி போட்ட நாள்.
ஆரம்பிக்கின்றது கலவரம்.
கடைத்தெருவில் ஒரு சீக்கியப்பெண்ணை கலவரக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும் ராமன் ,வீட்டிற்கு வரும் பொழுது ஒரு முஸ்லீம் குழு தன் வீட்டிற்குள் நுழைவதை காண்கிறான்.
ராமன் (கமல்) தாக்கப்பட்டு ,அவன் ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அவன் மனைவி (அழகான ராணி முகர்ஜி) கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு ராமன் முகத்தில் அந்த ரத்தத்துளிகள் தெறிக்க தெறிக்க உயிரை விடுகிறாள்.தீராதக்கறை ஆகிறது ராமனின் வாழ்க்கை
இடு இணை இல்லாத இழப்பை , நிமிட கணங்களில் அநியாயக் கொடுமைக்கு பலி கொடுத்த சாமான்யன் அடையும் உன்மத்த நிலையை அடைகிறான் ராமன். அவனுக்கு தேவை பலி உயிர்ப்பலி. தன்னுடைய உயிரினும் மேலான ஆத்மாவை அழித்த மிருகங்களின் உயிர்ப்பலி.
கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு கொல்கிறது அவன் துப்பாக்கி... அவன் மனைவியை கற்பழித்த டெய்லரை சுடும் பொழுது அந்த டெய்லர்," சார் ! தப்பு நடந்துருச்சு சார், தெரியாமப் பண்ணிட்டேன் சார்! எல்லாரெயும் போல வெறி புடிச்சு பண்ணிட்டேன் சார்! மன்னிச்சுருங்க சார்! சுத்தி எல்லாம் இப்படித்தான் , இருக்கிற எல்லாரும் இதைத்தான் பண்றாங்க! அதுனால நானும் பண்ணிட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்! "ன்னு கத்த கத்த ராமனால் சுடப்பட்டு சாகிறான்.. ராமனை இந்த கொலையைச் செய்ய வேண்டாம் ,எனத்தடுக்க வரும் ஒரு வயதான முஸ்லீம் பெரியவரையும் கொல்கிறான்.
இடையில் வரும் காட்சியில் , தெருக்களில் சீக்கியர்கள்," நாங்கள் ஒன்றுமே தவறு செய்யவில்லை ..வீட்டில் தான் அமைதியாக இருக்கிறோம்," என்று கெஞ்சும் ஒரு வயோதிக முஸ்லிம்மை ,அவர்களின் கால்களை அவர் பிடித்து கெஞ்ச கெஞ்ச, வெட்டிக்கொல்கின்றனர் . அவரை நோக்கி ஓடி வரும் அவர் குழந்தையை நெருப்பில் போட்டு எரிக்கின்றனர்.
இன்னொரு வயதான முஸ்லீம் பெரியவரை ராமனைப் போலவே உன்மத்த நிலையில் இருக்கும் ஒரு இந்து சிறுவன் நிதானமாக கத்தியால் குத்தி கொண்டு இருக்கிறான்.ராமனை கண்டவுடன் அவனை முஸ்லீம் என்று தவறாக எண்ணி மன்னிப்பு கேட்டு தன்னை விட சொல்லி கெஞ்சி ஓடி மறைகிறான். அந்த முஸ்லீம் பெரியவர் சாகும் பொழுது தன்னுடைய வீட்டிற்குள் ஒளிந்து இருக்கும் தன் பேரக்குழந்தையிடம் , "கவலைப்படாதே, நம்மை காப்பாற்ற ஒருத்தர் வந்து இருக்கிறார்' ன்னு சொல்லிக் கொண்டே உயிரை விடுகிறார்.
ராமன் அந்த குழந்தையை கொல்லும் நோக்கில் உள்ளே செல்ல, அங்கே ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண் குழந்தை தன்னுடைய தாத்தா கொல்லப்பட்டது அறியாமல்,அவரைத் தேடித் துழாவிக் கொண்டே வருகிறது ..ராமன் அக்குழந்தை தன்னைத் தொடாமல் இருக்க அதனிடம் இருந்து விலகி விலகி அந்த வீட்டை விட்டு ஓடுகிறான்.
ராமனின் இந்த உன்மத்த நிலை தொடர்வது ஒரு சில மணி நேரங்களே..ஆனால் அதற்குள் அவனுடைய வாழ்நாள் முழுவதற்கும் தீராத குற்ற உணர்ச்சிக்கும், பரிதாபர்த்திக்கும், நடுக்கத்திற்க்கும் இந்த சில மணி நேரங்களில் அவன் காட்டும் மிருகத்தனம் அவனை ஆளாக்கி விடுகின்றது.
இந்தக் காட்சிகளை வெறும் சினிமாவாக மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கையில் ஆயிரம் ஆயிரம் குறியீடுகளையும் அர்த்தங்களையும் வெளிபடுதக்கூடிய காட்சிகள் இவை.
சமூகக்கொடூரத்தை பார்க்கும் ஒரு சாட்சியாளனாக உற்று நோக்கி ஆராய்கையில், எந்த ஒரு சாதரண மனிதனுக்கும் அவனுடைய வாழ்வின் ஒரு சில மணி நேரங்களில் பெரும் இழப்பின் அல்லது மிகுந்த மகிழ்ச்சியின் காரணமாக இந்த பித்த நிலை ஏற்படுகின்றது.
இந்தக் கணங்களில், அவன் தன்னை, மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு மிருகக் கடவுளரை (beastial God ) போல் அனைத்து மானிடப் பதர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவனாக நினைத்து கொண்டு பெரும் ஆவேசத்துடன் எண்ண இயலாத செயல்களில் இடுபடுவார்கள். அல்லது தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஒட்டு மொத்த சமுகத்தினிடம் இருந்து வட்டியும் முதலுமாக திரும்பப்புடுங்கும் வெறியான பைத்திய நிலை.
சர்வாதிகாரிகளுக்கும் மதவாதிகளுக்கும் இதே மனநிலை, அவர்களின் வாழ்நாள் முழுக்க இருக்கிறது. ஆனால் இப்படி தன்னுடைய பேச்சு ஆற்றலாலும், எழுத்தாலும் அன்றாடங்காச்சிகளையும் , நடுத்தர மனிதனையும் தூண்டி விட்டு வெறியாட்டங்களில் ஈடுபட வைத்து, அவர்களின் வாழ்க்கையை முழுமையாக திசை மாற்றும் இந்தத் தலைவர்கள் பின்னாட்களில் தன்னுடைய பேரன், பேத்திகளுடனும், குடும்பத்துடனும் இந்த செயல்களுக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் மகிழ்ச்சியாக குற்ற சுவடின்றி கழிக்கிறார்கள். இல்லை வேறொரு சர்வாதிகாரியின் சிறைச்சாலைகளில் புத்தகங்களுடனும் தியானத்துடனும் மென்மையாக மரணத்தை எதிர் நோக்கின்றனர்.
- தொடரும்
direct action day 1. 2.
hey ram university of iowa review
hey ram -An indepth analysis
(நண்பர்களே உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் பதியுங்கள் )
அகந்தையின் அளவு – ஜெ.பிரான்சிஸ் கிருபா
4 days ago
1 comment:
You these things, I have read twice, for me, this is a relatively rare phenomenon!
Personalized Signature:常州麻将,常州三打一,常州攻主,常州斗地主,常州4人升级
Post a Comment