பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு - 2 இல்லை இந்த பதிவு ,அதுக்கு பதிலா
சீன அரசு ஒலிம்பிக்ஸ்'க்காக இங்க ஊருக்குள்ள செய்யுற ராவடிகளப்பத்தி எழுதுறதுக்கு முன்னாடி , '
ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழால சீன அரசு செஞ்ச மோசடிகள்'- அப்படி இப்படின்னு ஏதோ உலகமகா கொடுமை நடந்த மாதிரி இந்த மேற்க்கத்திய மீடியாக்கள் தான் மக்கள்கிட்ட பொய் பிரச்சாரம் பண்ணிட்டு இருக்குன்னா, நம்ம செட்லயும் பல பேரு அதே கேள்விய கேக்குறாங்கே
அவுங்களுக்கு முக அழகு சரியா இல்லைன்னு யாங் பெய்யி(Yang Peiyi) 'ங்குற 7 வயசு பொண்ணுக்கு பதிலா ரொம்ப அழகா இருக்குற லின் மியோகே'(Lin மியோகே)ங்குற 9 வயசு பொண்ண பாட வச்சுட்டானுங்க இந்த கொடுமைக்காரப் பாவிங்க !!! பாவம் !அந்த பச்ச புள்ள மனசு எவ்வளோ பாடு பட்டுருக்கும் ! ஊரையே ஏமாத்திட்டாங்க , அது இதுண்ணு சொல்றவங்களுக்கு
உண்மை என்னன்னா ?
யாங் பெய்யியோட முகம் நிராகரிக்கப்படல , மாறாக லின் மியோகோவோட குரல் தான் நிராகரிக்கப்பட்டது... சீனா ஒலிம்பிக்ஸ்'க்காக கடந்த 7 வருசமா ஏற்பாடுகள் பண்ணிட்டு வரது, உலகமே
அறிஞ்ச ரகசியம்..அந்த ஏற்பாடுகள்ள ஒன்னு தான் துவக்க விழா நிகழ்ச்சிகள்ள பங்கேற்க்கிற குழந்தைகள தேர்ந்து எடுக்குறது..அதுல ஆடுற, பாடுற குழந்தைகள்,
கொடி பிடிச்சிட்டு வர்ற குழந்தை, சும்மா வந்துட்டு போறவங்க இப்படி எல்லாரேயும் நாட்டோட பல மூளைகள்ள இருந்து தேர்ந்து எடுத்துட்டு இருந்தாங்க. கலை நிகழ்சிகள்ள ஒரு பகுதியா சீனாவின் மிக பிரபல்யமான பியானிஸ்ட்(pianist) லங் லங்கோட (லங் லங்) சேர்ந்து பியானோ வாசிச்ச லி முஜி (Li Muzi) பாப்பாவும் அதுல ஒன்னு. எல்லா நிகழ்ச்சி பகுதிகள்ளேயும் எந்த குழப்பமும் இல்லாம தேர்வு நடந்துச்சு
கடைசில Ode to the Motherland'ர சீனா தேசப்பக்தி பாடல பாடுற குழந்தைய தேர்ந்து எடுக்குறதுல தான் வந்தது குழப்பமே,அந்த ரெண்டு குழந்தைகளுமே ரொம்ப நல்ல பாட, ஒருத்தர தான் தேர்ந்து எடுக்க முடியும்னு நிலைமை வர, குழந்தைங்க மனசு புண்பட கூடாதுன்னு ரெண்டு பேர்ல ஒருத்தர பாடுற மாதிரி நடிக்க வச்சு, ஒருத்தர பின்னாடி டப்பிங் கொடுக்க வச்சு சரி கட்டிட்டாங்க. அடுத்த நாளே இதை சீன அரசு மக்களுக்கு தொலைக்காட்சி (CCTV) மூலாமா தெரிவிச்சுருச்சு ..உண்மைல இப்போ ரெண்டு குழந்தைகளும் ரொம்ப சந்தோசமா சீன தொலைக்காட்சிகள்ள நிறைய பேட்டிகள் கொடுத்துட்டு இருக்காங்க.
ஒலிம்பிக்ஸ்'லியே என்னமோ இப்போ தான் இப்படி டப்பிங்
கொடுத்துட்டாங்கோன்னு நீங்க கூவினா சார் ரொம்ப காலமா அது நடக்குது . சமீபத்துல 2006 குளிர்கால ஒலிம்பிக்ஸ்ல இத மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க
அப்பொறம் அந்த பட்டாசு கொளுத்தி போட்ட விஷயம் ..
மொதல்ல அது தியனன்மென் வாயில்லே (Tiananmen Gate - Not Square ) இருந்து பறவை கூடு விளையாட்டு அரங்கத்துக்கு (bird's nest stadium ) வரலை...
வந்தது யோங்க்டிங்க்மேன் கேட்'ல (Yongdingmen Gate) இருந்து. அது மட்டுமில்லை ,அங்க மட்டும் இல்லாம பெய்ஜிங் நகர சுத்தி இந்த மாதிரி ராட்சச பாத சுவடுகள் நகற்ற மாதிரி செஞ்சு இருந்தாங்க ..அதுல யோங்க்டிங்க்மேன் கேட்'ல இருந்து பறவை கூடு விளையாட்டு அரங்கத்துக்கு வர்ற மாதிரி ஏற்பாடு செஞ்ச 29 பாத சுவடுகள்ள 28'அ கொளுத்தி விடாம ஒன்னே ஒன்ன மட்டும் கொளுத்தினாங்க. ஏன்ன்னா விளையாட்டு அரங்கத்துக்குள்ள உட்கார்ந்து இருந்த புஷ் மாமாவும்
அவரோட சேர்ந்து குந்திகிட்டு இருந்த மிச்ச சொச்ச நாட்டு அதிபர்களும் தலைவர்களும் தான்.
விழா ஆரம்பிக்குறதுக்கு கடைசி ஒரு நாள் முன்னாடி விளையாட்டு அரங்கத்த சுத்தி இருந்த வான்வெளிக்குள்ள எந்த விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறக்க கூடாதுன்னு அதிபர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லிட்டாங்க. ரெண்டாவது காரணம் அன்னைக்கு பெய்ஜிங்ல இருந்த மூடுபனியும் மப்பும் மந்தாரமா இருந்தா வானமும் தான். பெய்ஜிங்ல பல இடங்கள்ல மழை தூறிட்டு இருந்துச்சு இந்த மாதிரி மிக பெரிய ஒரு வான வேடிக்கையை படம் பிடிக்கணும்னா அதை ஓரமா ஒரு கேமரா வச்சுக்கிட்டு புடிச்சா 4 புள்ளி தான் தெரியும். ஹெலிகாப்டர்'லியோ அல்லது மிக உயரமானா கட்டிடத்துலயோ கேமரா செட் பண்ணி புடிச்சா தான் நம்ம கொஞ்சமாவது டிவில பார்த்து ரசிக்க முடியும். இல்லேன்னா
என்னடா 29 புள்ளி கோலம் போடுறாங்கன்னு காமெடி பண்ணிட்டு போய்ட்டே இருப்போம்.
படிச்ச மக்களுக்கு நல்லவே தெரியும் கொஞ்சம் நேரம் மப்பும் மந்தாரமா இருக்குற ,கொஞ்ச நேரம் மழை தூரிட்டு இருக்குறா நேரத்துல ஹெலிகாப்டர்ல பறக்குறதும் அதுல இருந்து படம் புடிக்குறதும் ,அதுவும் அனுமதி இல்லாததுனால விளையாட்டு அரங்கத்துல இருந்தது ரொம்ப தூரம் தள்ளியிருந்து படம் புடிக்குறதும் வீணாப்போன வேலை'ன்னு.
இப்படி ஒரு நெருக்கடியான நேரத்துல அதுவும் கிடைச்ச கொஞ்ச நேரத்துல ஏற்கனவே ஒத்திகை பார்த்து வச்ச பட தொகுப்ப வச்சு கொஞ்சமா கிராபிக்ஸ் வேலை செஞ்சு நம்மள அசர வச்சதுக்கு
சீன தொலைக்காட்சிக்கு (CCTV) தான் ஒரு சல்யுட்.பொறுங்க ..உண்மைல
பெய்ஜிங் நகரத்தோட வானம் தெளிவா இருந்த, ஹெலிகாப்டர் பறக்க அனுமதி இருந்த பகுதிகள்ல , பெய்ஜிங்கின் தென் பகுதியில் இருந்து வட பகுதி வரைக்கும் ராட்ச்சசன் நடந்தான்.இதை எல்லாம் இங்க உள்ளுக்குள்ள குந்திகிட்டு நம்ம சீனாக்கார நண்பர்களோட லைவ் மொழிபெயர்ப்பு பிளஸ் காமன்ட்டரியோட பார்த்ததுனால சொல்றேன்.
மக்களே கொஞ்சமாவது உட்கார்ந்து யோசிங்கப்பா..சும்மா அமெரிக்கா பத்திரிகைக்காரன் சொல்றான்னு வரிஞ்சி கட்டிட்டு வரதீங்க... சீனாக்காரனுக்கு அமேரிக்காகாரன புடிக்காதுன்னு அவனுங்க எல்லாரும் சொல்றத நானும் ஒரு காலத்துல நம்பிட்டு இருந்தேன் இங்க வந்து பார்த்தா தான்
தெரியுது, ஒவ்வொரு சீனா குடி மகனுக்கும் புடிச்ச நாடு எதுன்னு கேட்டா மொதல்ல அமெரிக்கா, ரெண்டாவது
ஐரோப்பா.அப்பொறம் இந்த செடிக்கு தண்ணி ஊத்துறது, ரோஜாவ மலர வைக்குறது (உண்மைல நினைச்ச நேரத்துல ரோஜாவ மலர வைக்குறானுங்கப்பா ) இதெல்லாம் இங்க நடக்குது. ஆனா அது எல்லாம் செய்ஞ்சு ஒவ்வொரு ஊரையும் எப்படி அழகு படுத்துறாங்ககிறத சொன்னா பாதி பேரு பொட்டிய கட்டிட்டு சீனாவுக்கு ஓடி வந்துருவீங்க
அதேயும் சொல்றேன் அடுத்த பதிவுல
நன்றி :CCTVசீனா டெய்லி
10 comments:
Beijing Olympics: 'Ethnic' children revealed as fakes in opening ceremony - Telegraph: "Another section of the Beijing Olympics opening ceremony has been exposed as faked - the children supposedly representing the country's 56 ethnic groups were in fact all from the same one, the majority Han Chinese race."
Olympics Opening: "Fake" ethnic minority children at Olympic opening ceremony
AFP: Pro-Tibet activist to be deported after Olympic protest
China condemned for manhandling journalist covering Beijing pro-Tibet action
Sports of The Times - Athletes Only as Old as China Says They Are - NYTimes.com: "If Internet access is sketchy, work around it. If the American speed skater and activist Joey Cheek has his visa revoked on the eve of the Games, deal with it. If there is evidence against the Chinese gymnasts beyond the usual Olympic suspicions, don’t believe it."
தல,
ரொம்ப நன்றி.... இந்த குறை சொல்ல போட்டி போடும் மக்கள பாத்தா எனக்கு கொஞ்சம் டென்ஷன் ஆயிடும்.... Ignorance என்பதை புரிந்து கொள்ள கூட முடியாத பல அறிவாளிகள்..நினைத்த எதை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யும் கருத்து சுதந்திரம் ....
உங்க பதிவுக்கு மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள்....
மெய்ப்பொருள் காண்பது அறிவு...
ஒரு மனுசர் என்ன தான் ஒரு காரியத்தை ஒழுங்கா செஞ்சாலும் அதுலயும் நொர நொட்டியம் கண்டுப்பிடிக்குறதுல வெள்ளைக்காரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
பாஸ்டன் பாலா,
ஒலிம்பிக்ஸ் மட்டும் அல்ல, உலக அளவிலானா ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் சீனா வயது குறைந்த விளையாட்டு வீரர்களை பங்கு பெற செய்கிறது என்பதும் ,அதற்க்கு சீன அரசு ஒவ்வொரு முறை மறுப்பு சொல்வதும் நெடு நாளாக நடக்கும் செய்தி. இந்த முறையும் அதே புகார் அதற்கு வழக்கம் போல சில ஆதரங்களுடன் சீன அரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது .சீன அரசு செய்தி ஊடகங்களையும் சற்று கூகிள் செய்தால் நீங்க சொன்ன எல்லா குற்றச்சாட்டுக்கும் பதில் கிடைக்கும்
natty & Victorious ,
நீங்க சொல்றது ரொம்ப சரிப்பா, சும்மா சீனா மேல நொட்டு சொல்லிட்டு இருக்குதே இவுங்க வேலையா போச்சு .அதுக்கு சீனா இன்னும் ௨0 ஆண்டுகளில் அமெரிக்க , ஐரோப்பாவை தூக்கி சாப்பிட்டு விடும் என்ற பயம் ஒரு முக்கிய காரணம் .
என்னுடைய பதிவு: சாதனைச் செம்மல் சீனா & தியாக ஜோதி ஒலிம்பிக்ஸ்
good one.
நன்றி பாலா , சர்வேசன்
தங்கள் பதிவு அருமை அது தங்களின் வெளி உலகத்தில் இருந்து சீனாவை பார்க்கும் கருத்து ..
சீனாவை முழுக்க தவறுகள் அற்ற நாடு'ன்னு நான் வக்காலத்து வாங்கலயு
ஆனா சீனா எது செஞ்சாலும் தப்புன்னு மேற்கத்திய ஊடகங்களும் அதற்க்கு ஒத்து ஊதுபவர்களும் சொல்றது தான் எனக்கு மடத்தனமா தெரியுது
கலாச்சாரரீதியா , பழக்க வழக்கங்கள் ரீதியா ,முற்றிலும் மாறு பட்ட மக்கள் சீனர்கள். அவர்களோட வாழ்வை அவர்களோட பார்வையில் பார்த்தால் தெரியும், அவர்களின் ஒலிம்பிக் தங்க பதக்க ஆசைகளும் அதற்கான அவர்களின் முயற்ச்சிகளும் (அல்லது கொடுமைகளும் ).
Although from different places, but this perception is consistent, which is relatively rare point!
Post a Comment