கொஞ்சம் கூட பயமில்லாத பேச்சு, கொஞ்சம் கூட மக்களை பொய் சொல்லி ஏமாத்தாம உள்ளுக்குள்ள என்ன இருக்கோ ,அதை அப்படியே கொட்டிட்டு , அவ்வளவு தாண்டா நடிகன்னு' சாதரணமா சொல்லிட்டு போய்ட்டே இருக்கார் எம்.ஆர்.ராதா .
வாழ்வுரீதியான அல்லது கலைரீதியான புனிதத்தன்மையை தன் மேல அள்ளி பூசிக்கிட்டு, தலைக்கு பின்னாடி ஒரு ஒளி-ஒலி வட்டத்தோட இருக்கிறா மாதிரி தன்னை தானே நினைச்சிட்டு , தன்னோட பேச்சை கேக்குற மக்களேயும் ஏமாத்தி, தானும் ஏமாந்து , உண்மையில் இருந்து ரொம்ப தூரம் வாழ்ந்துகிட்டு இருக்குற நடிகர்களும் அவர்களை இன்னும் மலை போல நம்பிட்டு இருக்கிற கோடானு கோடி ரசிகர்களும் நிறைஞ்ச பூமி நம்ம தமிழ்நாடு .
இன்னைக்கு தேதில தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா, டி.வி தான் உலகம். இதையே பார்த்து இதுல வேலை செய்யிற, நடிக்கிற நடிகனுங்க, அவனுங்க பொண்டாட்டிங்க,நடிகைகள்,அவளுகளோட மாஜி,இந்நாள்,முன்னாள் காதலர்கள,அவன் என்ன சாப்பிட்டான்,என்ன டிரஸ் போட்டான்,என்ன வார்த்தை பேசினான் ,இதையே திருப்பி திருப்பி பேசி வாழ்க்கை சினிமா இல்லைனா சுன்யமாகிடும்'கிற மாதிரி ஒரு பிம்பத்த உருவாக்கிட்டாங்க மீடியாவும் அதை சார்ந்த தொழிலதிபர்களும்.
இதை பத்தி மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய தலைவர்களும் அரசியல்வாதிகளும் படத்துவக்க விழா ,பாட்டு ரிலீஸ் பண்ற விழா ,பைட் பார்க்குற விழா ,தியேட்டரே காலியா ஓடுன ஒரு சூப்பர் படத்தோட 100'வது நாள் விழா , அதுல நடிச்ச (????) வனுங்களுக்கு கேடயம்,கத்தி,மம்பட்டி கொடுக்குற விழா'ன்னு ரொம்பா பிசியா இருக்குறாங்க.
எவனாவது ஒரு நடிகன், "டேய் இப்படி எல்லாம் பண்ணாதீங்கடா , வேலைய பாருங்க முடிஞ்சா வாரத்துக்கு ஒரு தடவை வந்து தியேட்டர்'ல காசு கொடுத்து டிக்கெட் வாங்கி ஒரு படத்த பார்த்துட்டு போங்க ..வாழ்க்கைல அனுபவிக்க, ரசிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குன்னு " சொல்றானுங்களா ?...எவனுமில்லை .. கேட்டா இது எங்க தொழில் எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் எங்க மேல பைத்தியமா இருக்குறாங்களோ அவ்வளவு காசு'ன்னு போய்ட்டே இருப்பானுங்க
கமல்ஹாசன் மட்டும் ஒரு தடவை, அதுவும் மலையாள சேனலோ அல்லது சிங்கப்பூர் சேனலோ அதுல பேசும் பொழுது
"I am afraid that I am working in Cinema, which is not an essential commodity, but just another entertaining media. ஒரு காலத்துல தெருக்கூத்து பிரபல்யமா இருந்து அழிஞ்சது போலா இதுவும் அழிய வாய்ப்பு இருக்கு ' ன்னு சினிமா ஒரு கலை மட்டும் தான் வாழ்க்கை முறை இல்லைன்னு சொன்னார். ஆனா இப்போ அவரும் கூட இந்த வழிபாட்டு மாயை'ல சிக்கிட்டாருன்கிறத அவரோட சமீபத்திய பட துவக்க,பாடல் வெளியீட்டு விழாக்கள் உணர்த்துது .
இது இன்னைக்கு நிலைமைன்னா அந்த காலத்துல இன்னும் நிலைமை மோசமா இருந்து இருக்கு...படத்துல தலைவரா நடிச்ச நடிகர்களையே அப்படியே நிஜத்திலேயும் தலைவர்களா ஏத்துகிட்டு இருக்காங்க மக்கள். தங்களுக்கான தேவ தூதர்கள் பொய்களின் மூலம் பொய் முகங்களின் மூலம் வெளிப்படுரதுன்னான ஒரு கனவு அவர்களோடையது.
இப்படி நடிகனுங்க எல்லாரும்," நான் நல்லவன் ! நான் துறவி! நான் என் வாழ்க்கையவே இந்த சினிமாக்காக அர்ப்பணிச்சு இருக்கேன் ! "இப்படி கூவி கூவி, தன்னோட பொருள விக்காம தன்னை தானே வித்துட்டு இருக்கும் பொழுது...... "என்னாடா நான் கெட்டவன்னு, சொல்றியா ? ஆமாடா, நான் கெட்டவன் தான்! சொல்லிட்டு போடா என் மசிரு "ன்னு போய்ட்டே இருந்துருக்கார் எம்.ஆர்.ராதா
அவரோட இந்த மலேசியா பேச்ச கேட்க்கும் பொழுது
( எம். ஆர். ராதா அவர்களின் பேச்சை கேட்க படத்தை கிளிக்'கவும் )
பெரியாரோட உண்மையான பிம்பமா சினிமா'ல அவர் வாழ்ந்தது தெரியுது . "எம்.ஜி.ஆர ஏன் சுட்டேன், சினிமா நடிகனோட உண்மையான குணம் என்ன, அவங்க பட்ட கஷ்டம், இஸ்லாமிய மதம் பற்றிய அவர் பார்வை, தமிழ் மக்கள் மீதான கோபம், ரசிகன பற்றிய அவர் எண்ணம்'ன்னு பல விசயத்த பத்தி பேசுகிறார்..சாமி'ல இருந்து ஆசாமி வரைக்கும் கிழி கிழி'ன்னு கிழிக்குறார்
இதெல்லாம் கேட்டு முடிச்சதுக்கு அப்பறம், " அடடா! நம்ம காலத்துல எம்.ஆர்.ராதா இல்லாம போய்ட்டாரே!! இருந்து இருந்தா, ஒரு ஆட்டோகிராப் வாங்கி கூட சேர்ந்து போட்டோ எடுத்து இருக்கலாமே, அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு இருக்கலாமே 'ன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா நீங்க தாங்க உண்மையான தமிழ் சினிமா ரசிகருங்க.
நன்றி :
சிவாஜி டிவி
அகந்தையின் அளவு – ஜெ.பிரான்சிஸ் கிருபா
4 days ago
8 comments:
nanri
nantri
vanakam.iam highly impressed to read this article.'who dared to tell the youth who are going towards their destiny of destruction"- a good thought provoking one.really m r radha was a gentle man,m n nambiyar too... surprisingly both played 'villain 'rolls only.
GOOD ARTICLE.
திரு!திரு. ஹஸ், தங்களுடைய நன்றிக்கு நன்றி :)
திரு. ரத்தினசாமி ,நான் பார்த்து வியந்த ஒரு கலைஞன் எம்.ஆர்.ராதா அவர்கள். அவர்களை பற்றிய எனது பதிவு ,அதற்கு தங்களது பாராட்டு இரண்டுமே எனக்கு மகிழ்ச்சியை தருகின்றன
இன்னும் சிறப்பா எழுத முயற்சி செய்கிறேன்.
super thala :)
முதன் முறையாக வருகிறேன் - நண்பர் சுகுணா திவாகர் ராதா பற்றி எழுதிய பதிவை படித்து இருக்கிறீர்களா?
நன்றி நட்டி ...
இஸ்மாயில் இன்னும் சுகுணா திவாகரின் பதிவை படிக்க வில்லை
அவரின் பதிவு முகவரி தெரியாதது தான் காரணம்
:)
Some of the content is very worthy of my drawing, I like your information!
Post a Comment