கடந்த நாலு நாளா ரஷ்ய-ஜியார்ஜிய படைகளுக்கு இடையில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. என்ன பிரச்சனைனு பார்த்தா சோவியத்து யூனியன்'னில் இருந்து பிரிந்த ஜியார்ஜியா(Georgia)'வில் இருந்து பிரிந்த தெற்கு ஒஸ்ஸெதியா(South Ossetia) தான் காரணம்.
தெற்கு ஒஸ்ஸெதிய பிரிவினைவாதிகளின் கனவெல்லாம் எப்படியாவது அதை ரஷ்யாவுடன் இருக்கும் வடக்கு ஒஸ்ஸெதியாவுடன் சேர்த்து ஒரே ரஷ்ய ஒஸ்ஸெதிய மாகாணமாக ஆகி விடுவது. ஆனால் ஜியார்ஜியா தெற்கு ஒஸ்ஸெதியா எங்களுக்கு சொந்தாமனது, என்ன ஆனாலும் அதை விட மாட்டோம்'ன்னு அங்கு நடந்து கொண்டு இருந்த ஜியார்ஜிய அரசிற்கு எதிரான புரட்சிகளை அடக்கி கொண்டு இருந்தார்கள்.
இப்படி நிலைமை இருக்க தெற்கு ஒஸ்ஸெதிய பிரிவினைவாதிகள் தங்கள் குறிக்கோளின் முதல் கட்டமாக செப்டம்பர் 20, 1990 ஒஸ்ஸெதியாவை தன்னாட்சி பெற்ற குடியரசாக அறிவித்து கொண்டாலும், இன்னும் எந்த உலக அமைப்புகளும் அதை அங்கீகரிக்கவில்லை ரஷ்யாவை தவிர. ரஷ்யா கூட தன்னாட்சியை அங்கீகரித்து உள்ளதே தவிர,அதை ஒரு தனிப்பட்ட நாடாக அங்கீகரிக்கவில்லை. ஜியார்ஜியா இன்னும் ஒஸ்ஸெதியாவை தன் ஆளுகைக்கு
உட்பட்ட தன்னாட்சி பிராந்தியமாகவே அங்கீகரித்து உள்ளது.
மேலும் ஜியார்ஜியா சோவியத்து யூனியனிலிருந்து பிரிந்தவுடன் செஞ்ச மொத வேலை அமெரிக்காவுடனான தன் நட்பை மிகவும் பலப்படுத்தி கொண்டது. இப்போ ஜியார்ஜிய படைகள் உபயோகப்படுத்தும் அனைத்து போர் தளவாடங்களும் made in america'னு பச்சைக்குத்தி அனுப்பப்பட்டவை. இது ரஷ்யாவிற்கு ஜியார்ஜியா மீது மிகுந்த கோபத்தையும் நிரந்தர பகையையும் உருவாக்கியது.பதிலுக்கு ரஷ்யா கடந்த காலங்களில் ஒஸ்ஸெதிய பிரிவினைக்கு தனது முழு ஆதரவையும் அளித்து அதன் குடி மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் அளித்து ஜியார்ஜியாவின் கடுப்ப கிளப்பி விட்டுருச்சு.
நிலைமை இப்படி நீரு பூத்த நெருப்பாக இருக்க,போன வாரம் ஒஸ்ஸெதிய தன்னாட்சி அரசை ஒரு முடிவுக்கு கொண்டு வர ஜியார்ஜிய படைகள் அதன்
தலை நகர் ச்சின்வளி(Tskhinval OR chinvali)'க்குள்ள புகுந்து குண்டு வீசி தாக்குதல் நடத்த ஆரம்பிச்சுருச்சு. அது மட்டும் இல்லை ரஷ்ய அமைதி படை வீரர்களையும் தாக்கி அவுங்கள்ல 12பேர் மரணம், பொது மக்கள்ள 1500 பேரு மரணம்.இது போதாதா ரஷ்யாவ சீண்டி விட, பதிலுக்கு ரஷ்யா ஒஸ்ஸெதியாக்குள்ள புகுந்து ஜியார்ஜிய படைகளை ஒரு வழி பண்ணிட்டு இப்போ ஜியார்ஜியா'க்குள்ள புகுந்து ஒரு முழு யுத்தத்தையே நடத்த நேரம் பார்த்துட்டு இருக்காங்க.
ஒஸ்ஸெதியர்கள் இனத்தால் ஜியார்ஜியா'வில் இருந்து மாறுப்பட்டவர்கள். ரஷ்ய இனத்தை சார்ந்தவர்கள். இதன் காரணமாக ஜியார்ஜிய அரசு அங்கு ஒரு முழு இன அழிப்பை மேற்கத்திய நாடுகளின் துணையோடு நடத்தி கொண்டு இருப்பதாக ரஷ்ய அரசு குற்றம் சொல்கிறது. பதிலுக்கு ஜியார்ஜிய அரசு இது எங்க நாட்டு சொந்த பிரச்சனை , நாங்க இன அழிப்பு எல்லாம் நடத்தலை , பிரிவினைவாதிகளை தான் களை எடுத்து கொண்டு இருக்கிறோம். இதுல எப்படி ரஷ்யா தலையிடலாம்?'னு சொல்லுது.
ஜியார்ஜியா,உக்ரைன் போன்ற நாடுகளின் கனவு நேட்டோ (NATO)மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேர்வது.ஒஸ்ஸெதியர்கள் நாடோ'வில் ஜியார்ஜியா சேர்வதை மிக கடுமையாக எதிர்த்தவர்கள்.
இந்த போரினால் இது வரைக்கும் 30,000 ஒஸ்ஸெதிய மக்கள் அகதியா ரஷ்யாவிற்குள் வந்து இருக்காங்க.மேலும் 2000 த்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக செய்தி.
இதுல கடைசில லாபம் யாருக்குன்னு பார்த்தா அமெரிக்கா'வுக்கு தான். ஜியார்ஜியா,உக்ரைன், போன்ற சோவியத்து யூனியனிலிருந்து பிரிஞ்ச நாடுகளுக்கு எல்லாம் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதில் முதல் இடம் புடிப்பது அமெரிக்கா தான்.மேலும் ஜியார்ஜியா எண்ணெய் வளம் மிக்க நாடு . கருங்கடலின் ஓரத்தில் இருக்கும் அதை யார் கட்டுக்குள் வைப்பது அமெரிக்கா ரஷ்யா இரண்டிற்கும் ஆளுமை சார்ந்த ஒரு முக்கியத்துவம் கிடைக்கும்.
எனவே இந்த போர் கல்லறை கட்டப்பட்டு விட்டதாக எண்ணிய பனிப்போர் வெளிப்படையாக மீண்டும் துளிர் விட்டு இருப்பதின் அறிகுறி.
கடைசியாக வந்த செய்திகளின் ஜியார்ஜியா படி போர் நிறுத்தத்தை அறிவித்து , ரஷ்யாவுடன் தெற்கு ஒஸ்ஸெதிய சம்பந்தமாக நிரந்தர சமாதான உடன்படிக்கை ஏற்பட முயற்சி செய்து கொண்டு இருக்கிறது.
சம்பந்தப்பட்ட செய்திகள்
1. Georgia - OCHA report
2.Institute for War and Peace Reporting.
3.Washington post - Georgia retreats.
3 comments:
செய்தியைத் தமிழில் தந்த விதம் அருமை. வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. அப்படியே, இந்த போரைப்பற்றிய உங்களின் கருத்துக்களையும் வைத்தால் நன்றாக இருக்கும்.
உண்மையில், Cold War இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்த மாதிரி சந்தர்பங்களில் வெட்டவெளிச்சமாகிறது.
ராபின்,
ரொம்ப நன்றி எப்படியும் நமது செய்தி தாள்கள் இது போன்ற முக்கிய செய்திகளை 14 பக்கத்தில் ஒரு ஓரத்துல கட்டம் கட்டி போட்டு இருப்பாங்க ஆனா இதெல்லாம் தான் உலகத்தின் போக்கை மாற்றும் நிகழ்வுகள்
அமுதன்,
அமெரிக்கா ரஷ்யா இரண்டும் உலக வரை படத்தில் இருக்கும் வரை COLD WAR தீராது. அவர்கள் தயாரிக்கும் புது புது ஆயுந்தகளையும் கருவிகளையும் சோதிக்க உலகத்தின் பின் தங்கிய நாடுகளை ஒரு பரிசோதனை கூடமாக தானே இன்னும் உபயோகப்படுத்தி கொண்டு இருகிறார்கள். இந்த போர் அதற்க்கு மற்றும் ஒரு சான்று
Post a Comment