Monday, May 19, 2008

சீனா - நில நடுக்கம்



இந்த சீனமக்களை பார்க்கும் பொழுது ஒரு வித அச்சமும் மரியாதையும் ஆசையும் கலந்தோடிகிறது எனது மனதில்...அதிலும் இந்த நில நடுக்கத்துக்கு பிறகு அது இன்னும் கூடுகிறது. ஒரே மனசோடு முழு முச்சாக எதோ நெருங்கிய சொந்த பந்ததுக்கு ஏற்ப்பட்ட பிரச்சனை போல ஒட்டுமொத்த சீனாவும் நில நடுக்கம் வந்த Sichuan Province'ல இருக்கிறவங்களுக்கு பண/பொருள்/ மருத்துவ உதவிய அள்ளி கொண்டு கொடுத்துட்டு இருக்கு.


நில நடுக்கத்தின் போது அடுத்த வீட்டு டிவி பொட்டியையும் டிவிடி ப்ளேயரெயும் திருடி தலைல தூக்கிட்டு ஓடுர கும்பல் இல்லை..அதற்க்கு பதிலா நில நடுக்கம் நடந்தவுடன் அங்கு செல்வது உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும்கூட அங்க போயி மீட்பு பணில இடுபட்ட 200 மேற்ப்பட்ட மீட்பு பணியாளர்கள் பூமி சரிவிற்குள் புதைந்து போயி உள்ளனர்...


அவர்களெயும் உயிருடன் மீட்போம்னு சொல்லிட்டு இன்னும் அதிகமான மீட்பு பணியினர் Wenchuan County of southwest China's Sichuan உள்ள போயிட்டு இருக்கின்றனர்..



அந்த ஊருக்குள்ள போறதுக்கு உண்டான ரோட்'ஸ் ரயில்வே லைன்'ஸ் பாலங்கள் எல்லாமே நில நடுக்கத்துல பலத்த சேதமடஞ்சுருச்சு...



சீன ஜனாதிபதி Hu Jintau எப்படியாவது எல்லா மக்களேயும் மீட்க சொல்லி ராணுவம் மீட்பு பணியினர் மற்ற அனைவருக்கும் உத்தரவு போட்டு இருக்கார் ..அந்த உத்தரவு என்னா சொல்லுதுனா "உங்களால Truck'ல போக முடியலைனா, நடந்து போங்க இல்லை பாராசுட்டிலே குதிங்க, இல்லை வேற எந்த வழியிலாவது அங்க போயி மக்கள காப்பாத்துங்க"னு சொல்லி இருக்கார்.. அவர் சொல்றதுக்கு முன்னாடியே ஒரு சில ராணுவ பிரிவினர் நடந்து செல்ல ஆரம்பிச்சு விட்டனர்... மேலும் நகர பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் எல்லா கிரமங்களில் பாதிக்க பட்ட இடத்திலேயும் எல்லாரேயும் காப்பாத்துங்கன்னு சொல்லி இருக்கார்...






நில நடுக்கம் ஏற்பட்ட 1 வாரத்திற்க்குள் சுமார் 10 பில்லியன் யுவான் நிவாரண நிதி சேர்ந்து விட்டது..மொத்த பாதிப்பு 67 பில்லியன் யுவான் என்று கணக்கு... இன்று (May 19,2008) நில நடுக்கத்தினால் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி 2.28 PM நடந்தது... 3 நாட்கள் துக்க தினமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது .இன்று முழுவதும் CCTV மற்றும் அதை சார்ந்த டிவிக்களில் (சீனாவில் டிவி GOVT. கண்ட்ரோலில் உள்ளது) நில நடுக்கம் பற்றிய செய்திகள், காணாமல் போனவர்கள், மீட்க பட்டவர்கள் பற்றிய அறிவிப்பு 24 மணி நேரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது..சீனா முழுவதும் அஞ்சலி ஊர்வலங்கள்..ஓவ்வொரு ஊர்வலத்திலும் மக்கள் உணர்ச்சி பிளம்பாக "Sichuan மக்களே உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் கவலை படாதீர்கள், திரும்பி செழிப்பாக எழுவோம்- நாம் ஒன்றாக சேர்ந்தே" என்ற படியான கோஷங்கள் .



எந்த TVயிலும் ஒரு விளம்பரம் கூட கிடையாது இன்று முழுவதும். ஒட்டு மொத்த சீனாவும் 2.28 pm'இல் இருந்து 3 நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றது.Stock Market டிரேடிங் திங்கள் மதியம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.அனைத்து பார்களுக்கும் கிளப்களுக்கும் 3 நாள் விடுமுறை.



34000 பேர் இது வரைக்கும் பலி ஆகி இருப்பதாக தகவல்.எல்லாத்தரப்பு மக்களில் இருந்தும் தன்னார்வ தொண்டர்கள் ராணுவ மீட்பு பணியினருடன் இணைந்து முழு மூச்சாக இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றி கொண்டு இருக்கின்றனர் ... எனது சற்றே சிறிய கம்பனியில் (250 பேர் வேலை செய்யும்) இருந்து மட்டும் 4 Lacs. ரூபாய் மதிப்புக்கு பண உதவி மட்டும் சேர்ந்து உள்ளது...


இவுங்கள்ள நிறைய பேரொட மாச சம்பளம் நம்ம ஊருல இதே வேலைல இருக்குறவங்க வாங்குறதுல பாதி தான் இருக்கும். இதையும் 2001யில் ஏற்ப்பட்ட குஜராத் நில நடுக்கம்,அப்பொழுது நடந்த பகல் கொள்ளைகள், கடைகள் சூறையாட பட்டதில் நடந்த கொள்ளைகள்,TV'க்களின் PRIME TIME Earthquake பற்றிய செய்திகள் அதை விட அதிகமான நேரம் வந்த விளம்பரங்கள் ,மீட்பு பணியில் தாமதம்,ஊழல் எல்லாத்தேயும் நினைக்கும் பொழுது...




போங்கடா உங்க குடியரசாவது , மனித உரிமையாவது , மண்ணங்கட்டியாவது

Premier orders troops into all villages in 24 hrs
Quake-hit Sichuan sees a flood of volunteers
In grave grief, China mourns quake dead

1 comment:

Natty said...

தல, உங்க பதிவுகள் எல்லாத்தையும் படிச்சாச்சு... நல்ல சிந்தனை ஓட்டம். அழகான மொழி நடை.... வளம் சிறக்க வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்க....

 

| இங்கிலீஷ்'ல |