Thursday, September 25, 2008

காதல்'ன்னு ஒரு எழவும் கிடையாது

காதல்'ன்னு ஒரு எழவும் கிடையாது
சொன்னவர் பொய்யன்
அவருக்கு சொன்னது MR. ராமசாமி (பெரியாருங்க )
அத பார்த்து உங்களுக்கு சொன்னது நான்
நீங்க ?

சொன்ன மேட்டரு இங்க



நன்றி:
பொய்யன்.
இட்லி வடைய போட்டு வறுத்த மாதிரி என்னை வருத்துறாதீக !!!

Thursday, September 18, 2008

ஹே! ராம் ! - ஹிந்து முஸ்லீம் வன்முறை, கலவரக் கொடூரத்தின் சாட்சி. - தொடர்ச்சி.



திரும்ப ஹே-ராமிற்கு

இப்படியாகத் தொடர்கிறது இந்த பலி விளையாட்டு,காளிக்கும், அல்லாஹ்வுக்கும் ஏற்பட்ட இந்த மாய ரத்த பசி தீரும் வரை தாராளமாக பலி கொடுக்கின்றனர் மக்கள், அடுத்தவர் உயிர்களையும் , குழந்தைகளையும், பெண்களையும், வழமையாக கொடுக்கும் மிருகங்களுடன் சேர்த்து.

சில மணி நேரங்கள் ராமன் ராவணன் ஆகிறான், மன சாந்திக்காக கொஞ்சக் கொலைகள் , பித்தத்தில் கொஞ்சக் கொலைகள் செய்து . பின்னாளில் எவ்வளவு முயன்றும் அவனால் இந்த நினைவுகளில் இருந்து தப்ப இயலவில்லை. காரணம் ராமன் ஒரு நடுத்தர மனிதன்,அவன் காசுக்காக கொலை செய்யும் அன்றாடங்காச்சியோ, அல்லது குல சுத்தத்துக்காகவும், கொள்கைக்காகவும் கொலை செய்யும் மதவாதியோ இல்லை. எந்நாளும் அன்பை பொழியும் குடும்பமும் , காதல் தரும் ஆதர்ச மனைவியும் அமைந்தும் கூட இந்த பழியும், உணர்வும் முக்கி எடுத்த அமிலக்கரை போல அவனை விட்டு அழிய மறுக்கின்றது.
பலியும் அவனே! பலி கொடுக்கபட்டவனும் அவனே !


குஜராத்திலும் , காஷ்மீரிலும் ,ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் , பாகிஸ்தானிலும், மியன்மாரிலும், ஆப்பிரிக்காவின் அனேகமாக அனைத்து தேசங்களிலும், லட்சோப லட்சம் ராமன்கள் வாழ்வின் மன அமைதியை தொலைத்து விட்டு, திரும்ப இயலாத பாழ் இருவெளிக்குள், கொலை கூச்சல்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இதை விட்டுத் திரும்ப வாய்ப்பும் இல்லை, அன்பையும், காதலையும் தர குடும்பமும், மைதிலியும் இல்லை...

அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு வாக்களித்த அவர்களின் ஒரே விடுதலை திரும்ப இந்த கொடூர நிலையிலும், தொடரும் உயிர் பலியிலும் தான் உள்ளது.

இந்த கொலைக்களங்களும் பிற இனத்தை அளிக்கும் பரிசோதனைக் கூடங்களும் பூமிக்கு ஒன்றும் புதிதல்ல. எத்தானையோ முறை இப்படி இந்த பலி நிகழ்ந்து இருக்கிறது வரலாற்றில் ..எத்தானையோ முறை லட்சகணக்கான முஸ்லிம்கள், யூதர்கள்,கிருத்தவர்கள்,ஹிந்துக்கள் என்று அடையாளம் பூசப்பட்ட மக்களின் உய்ரிகள் உடைமைகள் அழிக்கப்பட்டன ..

பலி தான் அதிகமாகியதேத்தவிர, பலி கேட்ட கடவுள்களின் தாகமோ, பசியோ அடங்க வில்லை.

சரி இந்த கொலைகாரக் கடவுள்களை விட்டு விடுவோம் .அப்படியாவது இந்த பலி நிற்கட்டும் என்று பார்த்தால் கிளம்பி கொண்டு வந்து நிற்கின்றன வர்க்க பேதங்கள்.

பன்னாட்டு முதலாளித்துவம் ஏழைகளின் குருதியில் கிடைக்கும் போதையை, லாபத்தை விட தயாரில்லை.ஏழைகளும், தன்னுடைய உரிமையை முழுவதுமாக விட்டு கொடுக்க போவதில்லை. பணக்கார இனத்திற்கும், அதன் நிரந்தர லாப மூட்டையும் பகையுமான அடித்தட்டு இனத்திற்கும் நில்லாத , ஓயாத சண்டை உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம்.


ஒரு இன அல்லது வர்க்க மக்களை அழிப்பதன் மூலம் ,சுத்தமான ஒரு சமுதாயத்தை படைத்து விட முடியும் அல்லது, அவர்களை அடிமைகளாக்கி நிச்சயமான ஒரு ஆதிக்கத்தை அடைந்து விட முடியும் என்று நினைப்பவர்கள் மடையர்கள்.

இந்த இனம் அழிந்தால் இன்னொரு இனம் வரும் போராட, இந்த மதம் அழிந்தால் இன்னொரு மதம் வரும் எதிர்க்க, இந்த வர்க்கம் அழிந்தால் இன்னொரு வர்க்கம் வரும் சண்டைக்கு , இது உலகம் தோன்றியது முதல் நடந்து கொண்டு இருக்கும் ஒரு தொடர் விளையாட்டு.

உன்னுடைய மதத்தில் , இனத்தில்,குழுவில், வர்க்கத்தில் இருந்தே வருவார்கள் எதிர்ப்பாளர்கள்
முந்தைய அல்லாத மற்ற மதத்தை விட கடுமையாக எதிர்ப்பார்கள் உன்னை.
என்ன செய்ய முடியும் உன்னால்?

ஆதி காலத்தில் எத்தனை மதங்கள், எத்தனை பேதங்கள் இருந்தன?. பழைய மதத்தின் உள்ளுக்குள் இருந்தே பிரிந்து வளர்ந்து வந்தது தான் அத்தனை புதிய மதங்களும்.

இப்படி வந்த எல்லா மதவாதிகளும் சொல்லி வைத்தாற்போல் கேட்பது பலி .
ஏன் இந்த பலி ? மாறுபட்ட மதங்கள் தான் பலி கொடுக்க தூண்டுபவர்களின் பிரச்சனையா ? இது எப்படியென்றால் உன்னுடைய வீட்டில் பிறக்கும் உன் சகோதரன் , உன் வீட்டில் கொடுக்கும் சைவ உணவினை ஆண்டாண்டு காலமாக உண்டு வளர்ந்து, பின்னாளில் வேற ஒரு புது வீட்டிற்கு போய் தனது காதலியுடன் ,கறி சோறு தின்று கொண்டு இருந்தால் அது பாவம் என்று அதற்க்காக அவனைக் கொலை செய்து தீர்வு காண்பதை போன்றது . நாளை உன் மகன் அதே தவறை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம் ?

மதம் மாறுவது முழுக்கத் தவறு என்பது முட்டாள்த்தனம். உனக்கு பிடித்த இனிப்பு எனக்கு பிடிக்காது, எனக்கு பிடித்த புளிப்பு உனக்கு பிடிக்காது. அதுவும் இன்று தான் நாளை இந்த பிடித்தல் கூட மாறும் அது போலத்தான் மத மாற்றமும். அது மனதால், அறிவால் ஏற்படுதல் நலம் . காசுக்காகவும் பயத்திற்க்காகவும் மதம் மாற்ற பட்டால் ,அதன் மூல மதம் மாற்றுபவன் அடைவது என்ன? தன் மதத்திற்கு எண்ணிக்கை கூடுமே தவிர, இந்த மாதிரி கொள்கை அற்று மதம் மாறுபவர்களால் ஒன்றும் யானை பலம் வரப்போவது இல்லை. வரப்போவது எல்லாம் யானை விட்ட குசுவிற்கு சமானம். கொஞ்சம் நேரம் நீடிக்கும், அதுவும் கெட்ட வாசம் தான்.

சிந்தித்து பார்த்தால் எந்த கொள்கையும் வந்து எவனுக்கும் சோறு போட போவதில்லை.உழைப்பை தவிர! வேண்டுமானால் கூலிக்கு மாரடிப்பவர்களுக்குக் கொஞ்சம் காசு கிடைக்கலாம் ,ஆனால் அதுவும் நிலை இல்லாத ,நிம்மதி இல்லாத காசு. வட சென்னையின் குப்பத்து மக்களுக்கு தெரியும் நிம்மதியான காசின் அருமை.
இப்படி ஒரு வருமானத்தை தன்னுடைய மக்களுக்கு அளிப்பது அரசாங்கத்தின் கடமை

அப்படி அது தவறும் பட்சத்திலேயே கடவுள்களும் மிருகங்களும் பசியால் முழித்து கொண்டு பலி கேட்கின்றன

Monday, September 8, 2008

ஹே! ராம் ! - ஹிந்து முஸ்லீம் வன்முறை, கலவரக் கொடூரத்தின் சாட்சி.

ரத்தத்துளிகள், மீண்டும், மீண்டும் கழுத்து நாளங்களை உடைத்துக்கொண்டு முகத்தில் தெறித்து விழுகின்றன . காதலோடு , ஆவலுடன் மூழ்கிய பொழுது உடலை காமத்தினால் சுட்டெரித்த அபர்ணாவின் ரத்தம் , இன்று ராமன் முகத்தில் தீராத கரையாய் வன்முறையின் அடையாளங்களோடு..

ஹே ராமில் வரும் இந்த காட்சி கலவரங்களில் பலியான சொல்லப் படாத , முகம் தெரியாத நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சாட்சி.






இந்த
காட்சியைப் பார்க்கப் படத்தை கிளிக்கவும்

சாகேத்
ராம் ஒரு சாதாரண நடுத்தர வாசி . மனதை நிறைக்க அழகான அன்பான காதலியாக அமைந்த மனைவி , வயித்தையும் மூளையையும் நிறைக்க நல்ல ஒரு வேலை என்று நிம்மதியாக வாழும் சாகேத் ராமின், நிகழ்கால வாழ்விற்கும், வருங்கால வாழ்விற்கும் என்றுமே தீராத சாபமாய் வந்து அமைகிறது அந்த நாள்.


முஹம்மது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினைக்காக மக்களை (குறிப்பாக முஸ்லீம்'களை) நேரடி நடவடிக்கைக்காக தெருவில் இறங்கச் சொன்ன நாள் (Direct action day ). சீக்கிரமாகவும் சுமுகமாகவும் நடக்க வேண்டிய பிரிவினையை, காந்தியும் காங்கிரசும் முட்டாள் தனமாக நேரம் தாழ்த்தி விபரீதத்தை வளர்த்து கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ் அரசும் ஒரு நிரந்தர நஷ்டத்தை பாரதத்திற்கு வெகு சாமர்த்தியமாக, நிதானமாக ஏற்படுத்தி கொண்டு இருந்த காலக்கட்டம்.

நேற்று வரை அன்பான உபசரிப்புகளுடனும் , வாய் சண்டைகளுடனும் இருந்த சமூகங்களுக்கு இடையில் பிரிவினை திரி கொளுத்தி போட்ட நாள்.

ஆரம்பிக்கின்றது கலவரம்.


கடைத்தெருவில் ஒரு சீக்கியப்பெண்ணை கலவரக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும் ராமன் ,வீட்டிற்கு வரும் பொழுது ஒரு முஸ்லீம் குழு தன் வீட்டிற்குள் நுழைவதை காண்கிறான்.

ராமன் (கமல்) தாக்கப்பட்டு ,அவன் ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அவன் மனைவி (அழகான ராணி முகர்ஜி) கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு ராமன் முகத்தில் அந்த ரத்தத்துளிகள் தெறிக்க தெறிக்க உயிரை விடுகிறாள்.தீராதக்கறை ஆகிறது ராமனின் வாழ்க்கை

இடு இணை இல்லாத இழப்பை , நிமிட கணங்களில் அநியாயக் கொடுமைக்கு பலி கொடுத்த சாமான்யன் அடையும் உன்மத்த நிலையை அடைகிறான் ராமன். அவனுக்கு தேவை பலி உயிர்ப்பலி. தன்னுடைய உயிரினும் மேலான ஆத்மாவை அழித்த மிருகங்களின் உயிர்ப்பலி.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு கொல்கிறது அவன் துப்பாக்கி... அவன் மனைவியை கற்பழித்த டெய்லரை சுடும் பொழுது அந்த டெய்லர்," சார் ! தப்பு நடந்துருச்சு சார், தெரியாமப் பண்ணிட்டேன் சார்! எல்லாரெயும் போல வெறி புடிச்சு பண்ணிட்டேன் சார்! மன்னிச்சுருங்க சார்! சுத்தி எல்லாம் இப்படித்தான் , இருக்கிற எல்லாரும் இதைத்தான் பண்றாங்க! அதுனால நானும் பண்ணிட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்! "ன்னு கத்த கத்த ராமனால் சுடப்பட்டு சாகிறான்.. ராமனை இந்த கொலையைச் செய்ய வேண்டாம் ,எனத்தடுக்க வரும் ஒரு வயதான முஸ்லீம் பெரியவரையும் கொல்கிறான்.

இடையில் வரும் காட்சியில் , தெருக்களில் சீக்கியர்கள்," நாங்கள் ஒன்றுமே தவறு செய்யவில்லை ..வீட்டில் தான் அமைதியாக இருக்கிறோம்," என்று கெஞ்சும் ஒரு வயோதிக முஸ்லிம்மை ,அவர்களின் கால்களை அவர் பிடித்து கெஞ்ச கெஞ்ச, வெட்டிக்கொல்கின்றனர் . அவரை நோக்கி ஓடி வரும் அவர் குழந்தையை நெருப்பில் போட்டு எரிக்கின்றனர்.

இன்னொரு வயதான முஸ்லீம் பெரியவரை ராமனைப் போலவே உன்மத்த நிலையில் இருக்கும் ஒரு இந்து சிறுவன் நிதானமாக கத்தியால் குத்தி கொண்டு இருக்கிறான்.ராமனை கண்டவுடன் அவனை முஸ்லீம் என்று தவறாக எண்ணி மன்னிப்பு கேட்டு தன்னை விட சொல்லி கெஞ்சி ஓடி மறைகிறான். அந்த முஸ்லீம் பெரியவர் சாகும் பொழுது தன்னுடைய வீட்டிற்குள் ஒளிந்து இருக்கும் தன் பேரக்குழந்தையிடம் , "கவலைப்படாதே, நம்மை காப்பாற்ற ஒருத்தர் வந்து இருக்கிறார்' ன்னு சொல்லிக் கொண்டே உயிரை விடுகிறார்.

ராமன் அந்த குழந்தையை கொல்லும் நோக்கில் உள்ளே செல்ல, அங்கே ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண் குழந்தை தன்னுடைய தாத்தா கொல்லப்பட்டது அறியாமல்,அவரைத் தேடித் துழாவிக் கொண்டே வருகிறது ..ராமன் அக்குழந்தை தன்னைத் தொடாமல் இருக்க அதனிடம் இருந்து விலகி விலகி அந்த வீட்டை விட்டு ஓடுகிறான்.

ராமனின் இந்த உன்மத்த நிலை தொடர்வது ஒரு சில மணி நேரங்களே..ஆனால் அதற்குள் அவனுடைய வாழ்நாள் முழுவதற்கும் தீராத குற்ற உணர்ச்சிக்கும், பரிதாபர்த்திக்கும், நடுக்கத்திற்க்கும் இந்த சில மணி நேரங்களில் அவன் காட்டும் மிருகத்தனம் அவனை ஆளாக்கி விடுகின்றது.


இந்தக் காட்சிகளை வெறும் சினிமாவாக மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கையில் ஆயிரம் ஆயிரம் குறியீடுகளையும் அர்த்தங்களையும் வெளிபடுதக்கூடிய காட்சிகள் இவை.

சமூகக்கொடூரத்தை பார்க்கும் ஒரு சாட்சியாளனாக உற்று நோக்கி ஆராய்கையில், எந்த ஒரு சாதரண மனிதனுக்கும் அவனுடைய வாழ்வின் ஒரு சில மணி நேரங்களில் பெரும் இழப்பின் அல்லது மிகுந்த மகிழ்ச்சியின் காரணமாக இந்த பித்த நிலை ஏற்படுகின்றது.

இந்தக் கணங்களில், அவன் தன்னை, மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு மிருகக் கடவுளரை (beastial God ) போல் அனைத்து மானிடப் பதர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவனாக நினைத்து கொண்டு பெரும் ஆவேசத்துடன் எண்ண இயலாத செயல்களில் இடுபடுவார்கள். அல்லது தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஒட்டு மொத்த சமுகத்தினிடம் இருந்து வட்டியும் முதலுமாக திரும்பப்புடுங்கும் வெறியான பைத்திய நிலை.

சர்வாதிகாரிகளுக்கும் மதவாதிகளுக்கும் இதே மனநிலை, அவர்களின் வாழ்நாள் முழுக்க இருக்கிறது. ஆனால் இப்படி தன்னுடைய பேச்சு ஆற்றலாலும், எழுத்தாலும் அன்றாடங்காச்சிகளையும் , நடுத்தர மனிதனையும் தூண்டி விட்டு வெறியாட்டங்களில் ஈடுபட வைத்து, அவர்களின் வாழ்க்கையை முழுமையாக திசை மாற்றும் இந்தத் தலைவர்கள் பின்னாட்களில் தன்னுடைய பேரன், பேத்திகளுடனும், குடும்பத்துடனும் இந்த செயல்களுக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் மகிழ்ச்சியாக குற்ற சுவடின்றி கழிக்கிறார்கள். இல்லை வேறொரு சர்வாதிகாரியின் சிறைச்சாலைகளில் புத்தகங்களுடனும் தியானத்துடனும் மென்மையாக மரணத்தை எதிர் நோக்கின்றனர்.

- தொடரும்

direct action day 1. 2.
hey ram university of iowa review
hey ram -An indepth analysis

(நண்பர்களே உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் பதியுங்கள் )

Sunday, September 7, 2008

சீனால தியேட்டர்ல படம் - THe incredible HULK


வந்து ஆறு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு படத்துக்கு கூட போகலை. இது தமிழனா பொறந்த நமக்கு எவ்ளோ பெரிய அவமானம்'னே?

டேய் வந்து 8 மாசம் ஆச்சுடா! அப்படியே படத்துக்கு போறதுன்னா என்ன படத்துக்கு போறது ? எல்லா தியேட்டர்'லயும் சைனீஸ் ,கொரியன் படம் தான் ஓடும் . இல்லேன்னா ஹாலிவுட் படத்தையும் டப்பிங் பண்ணி சைனீஸ்'ல காட்டுவானுங்க, ஒரு மண்ணும் புரியாது.

நமக்கு இன்னைக்கு நைட்டுக்கு எப்படியும் ஒரு படத்துக்கு போயி ஆகணும்.. அண்ணே கலைக்கு ஏது மொழி, சாம்பாருக்கு எதுக்கு புளி? அது ! இதுன்னு, மொக்கைய போட்டு கடைசியா அண்ணன ஒத்துக்க வச்சாச்சு

நேரா மல்டிப்ளெக்ஸ் கவுன்ட்டருக்கு போனோம்..ரெண்டு சீனக்காரிங்க, வாங்கோ ! வாங்கோ வணக்கம்'ன்னு , அன்ப பொழிய ஆரம்பிச்சாளுங்க.

மொதல எங்க ரெண்டு பேருக்கும் சீன மொழி பேச வராது ,சீனாக்கரங்களுக்கு இங்கிலீஷ் கிலோ என்ன விலை தான் ?...

எப்படி எந்த படம் எந்த ஷோ'ன்னு சொல்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்போ அப்பாடின்னு கவுன்ட்டற சுத்தி படங்களோட போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க ! hulk போஸ்டர் உட்பட.

ரொம்ப புண்ணியமா போச்சுடா சாமின்னு, கவுன்ட்டர் அம்மணிகிட்ட கைய காமிச்சு , அவள திரும்ப சொல்லி அண்ணன் ஓடி போயி hulk போஸ்டர்ர தொட்டுட்டு அங்க இருந்து ௨'ன்னு கத்தினாரு ... திரும்பி வேகமா கவுண்டர்கிட்ட ஓடி வந்து, டிக்கெட்ட கேட்டா அவ வேற ஒரு படத்தோட டிக்கெட்டு ரெண்ட கொடுத்தா. அண்ணன் கடுப்பாகி, திரும்பவும் ஓடி பொய் தொட்டு காமிக்க, திரும்பவும் வேற படம் இப்படியே 3 தடவ நடந்துருச்சு..

இம்புட்டேயும் நான் கவுண்டேர்'ல நின்னு ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்..
என்ன பிரச்சனைனா அண்ணன் தொட்ட hulk போஸ்டர் வலது பக்க ஓரமா இருந்தது. அந்த கவுன்காரி பார்க்கும் பொழுத்து hulk படத்தோட பக்கத்து போஸ்டர் வரைக்கும் தான் தெரியும், கூடவே அண்ணன் தெரிவாரு, ஆனா hulk போஸ்டர்ரோ அதை காட்டுற அண்ணன் கையோ தெரியாது ... கவுண்டர் ஸ்க்ரீன் மறைச்சிகிரும்.

நான் வந்து ,அண்ணே என்ன ஒளிஞ்சி பிடிச்சி விளையாடுறீங்களா அம்மணியோட?'ன்னு கேட்க , அண்ணன், டேய் ! நானே கடுப்புல இருக்கேன், படமே வேண்டாம், வா சரக்கு அடிக்க போலாம்'ன்னு டென்ஷன் ஆகிட்டாரு.

நான் அப்புறம் அண்ணே இது தான் பிரச்சினைன்னு உண்மைய சொல்லி அந்த அம்மணிய கையோடு இழுத்துக்கிட்டு போயி hulk 'க காமிச்சோம்..

ஒரு வழியா அம்மணி புரிஞ்சிக்கிட்டு 2 டிக்கெட்டு நைட் 10.30 மணி ஷோவ்வுக்கு தந்துச்சு. ஒரு மணி நேரம் சும்மா அந்தா மால்ல சுத்திட்டு திரும்ப 10.20 'க்கு போனா உள்ள விட மாட்டேனுன்டாங்க ...உங்க பங்க்ச்சுவாலிட்டி'ல இடி விழன்னு 10 நிமிஷம் கழிச்சு உள்ளை போயி உட்கார்ந்த்தோம் .

பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை தியேட்டர்'ல அப்படியே நம்ம ஊரு INOX தான் சவுண்ட் எபக்ட்ஸ் , ஸ்க்ரீன் எல்லாமே ... பாத்ரூம் கூட அழகா அதே ஒன்னுக்கு அடிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க ஒரு ஸ்க்ரீன் மூஞ்சிக்கு நேரா..

படம் பரவா இல்லை ... மொழி எல்லாம் தேவை படல புரிஞ்சிக்க ...லைட்டப்போட்டு தியேட்டர்ர விட்டு எழுந்துறிக்கும் பொழுது எண்ணி பார்த்த மொத்தமா 20 பேரு தான் இருக்கானுங்க

கர்மம் 20 பேருக்கு ஒரு ஷோவாடா?. இதே எங்க ஊரா இருந்தா இந்நேரம் வெள்ளி கிழமை நைட் ஷோவுக்கு சத்யம் தியேட்டர் புல்லாகி கும்மி அடிச்சி இருக்கோம்!!!

எப்படியும் அடிச்ச சரக்குக்கு கொஞ்ச நேரம் ac'ல உட்கார்ந்தாச்சு .
அப்படியே மப்ப மெயின்டைன் பண்ணி வீட்டுக்கு வண்டிய விட்டாச்சு
 

| இங்கிலீஷ்'ல |